புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 08, 2021)

பழைய வாழ்வுக்கு திரும்பாதேயுங்கள்

கலாத்தியர் 6:14

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக


நான் யார் என்று உனக்கு தெரியும் தானே! என்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பும்படி என்னைக் கோபமூட்டாதே, அந்தக் காலத்தில் இந்த ஊரே என் பெயரைக் கேட்டால் நடுநடுங்கும் என்று ஒரு மனிதனானவன் கூறிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, சில வேளைகளிலே, இப்படிப்பட்ட பேச்சுக்களை தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக் கொள்பவர்களும், அறிக்கையிடுவதை நாங்கள் அவ்வப்போது கேட்டிருக்கி ன்றோம். ஏன் தேவனை அறிந்த வர்கள் இப்படியாக தங்கள் பழைய பாவங்களையும், அக்கிரமங்களையும் பற்றி பெருமையாக பேசிக் கொள்கி ன்றார்கள்? ஏதோ ஒரு சந்தர்ப்பத் தில் தங்கள் கருத்துக்கு முரணாக பேசுகின்றவர்களை அடக்கும்படியா கவும் அல்லது தங்கள் குற்றங்களை சுட்டிக்காட்ட வரும் ஆலோசகர்களை விரட்டும்படியாகவும் தங்கள் பழைய துன்மார்க்கமான வாழ்க்கையைப் பற்றி பெருமிதமாக பேசிக் கொள்கின் றார்கள். இன்னுமாய், தங்கள் இளமைக் காலத்தில் தாங்கள் செய்த மாம்ச இச்சைகளை நிறைவேற்றும், பாவங்களைக் குறித்து வெட்கப் படுவதற்குப் பதிலாக, பழைய நண்பர்களோடு சேர்ந்து, அவர்களோடு அவர்களாக, தாங்கள் களைந்து போட்ட பழைய மனு~னுடைய சுபா வங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையிலே, பாவ பழக்கங்களை மறுப டியும் அசை போடுகின்றார்கள். நாயானது தான் கக்கினதைத் தின்னு ம்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான். (நீதி 26:11). நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்ற பிரகாரம் நாம் ஒருபோதும் நம்முடைய பழைய வாழ்க்கையை குறித்து மேன்மைபாராட்டக்கூடாது. (2 பேதுரு 2:22). கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவைகளால் ஜெயிக்கப்ப ட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் மிகவும் கேடுள்ள தாயிருக்கும். மோசம் போக்கும் பழைய மாம்ச கிரியைகளி லிருந்து நமக்கு விடுதலை தந்த ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை யைக் குறித்து மட்டுமே நாம் மேன்மை பாராட்ட வேண்டும். நாம் கிறிஸ்துவுக்குள் புது சிரு~;டியாயிருக்கின்றோமே.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி வேறு பிரித்த தேவனே, நான் விட்டு வந்த பழைய சுபாவத்திற்கு ஒருபோதும் திரும்பாதபடிக்கு, பரிசுத்தமுள்ளவைகளை சிந்தித்துக் கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8