புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 07, 2021)

அடிமைத்தன கட்டுகளில் அகப்பட்டுள்ளேன்...

1 யோவான் 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள் ளவராயிருக்கிறார்.


போதகரே, நான் ஒரு பாவி. அசுத்த உதடுகளுள்ள மனுஷன். எப்படி நான் தேவனுடைய சமுகத்திற்கு செல்ல முடியும்? என் வாழ்க்கையானது மாறி, நான் பரிசுத்தமடைந்த பின்பு, நான் தேவ சமுகத்திற்கு சென்று ஜெபம் செய்வேன் என்று ஒரு மனிதனானவன் கூறிக் கொண்டான். போதகர் அந்த மனிதனை நோக்கி: மகனே, பல மனிதர்கள், இப்படி ப் பட்ட குற்ற உணர்வுகளோடு வாழ்ந்து வருகின்றார்கள். சில வேளைக ளிலே தேவ பிள்ளைகள் கூட, தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பின்ன டைவுகளால், எப்படி நான் தேவ சமுகத்திற்கு சென்று ஜெபிக்க முடியும் என்று ஜெபிப்பதை விட்டுவிடுகின் றார்கள். ஒரு சமயம், விபச்சாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவி னிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபச்சாரத்தில் கையும் மெய்யு மாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட் டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பி ரமாணத்தில் நமக்குக் கட்டளையிட் டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அன்றைய உலகின் சட்ட ப்படி இப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழும் ஸ்திரிகள் கல்லெறிந்து கொலை செய்யப்படுவார்கள். அவள் ஆண்டவராகிய இயேசுவின் சமுகத்திற்கு கொண்டுவரப்பட்டாள். அவருடைய சமுகத்திலே, பேசுவ தற்கு அவளிடம் வார்த்தைகள் இல்லை. அவளை கொண்டு வந்தவ ர்கள் அவளைக் கல்லெறிந்து கொலை செய்யும்படி எத்தனித்துக் கொண்டிருந்தார்கள். அவமானமடைந்தவளாய், ஆண்டவர் இயேசுவின் சமுகத்தில் நின்ற அவளுக்கு அன்புள்ள ஆண்டவராகிய இயேசு, மன மிரங்கி, அவளை மன்னித்து, இனி பாவம் செய்யாதே என்று அனுப்பி விட்டார். இன்று நீ உன் பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையடைய விரும்பினால்;, அறையைப் பூட்டிக் கொண்டு, ஆண்டவராகிய இயேசுவை நோக்கிப் பார். பாவிகள் தங்கள் பாவத்தில் அழிந்து போவது அவரு டைய சித்தமல்ல. சொல்ல முடியாத அடிமைத்தன கட்டுக்களிலிருந்து விடுதலையை கொடுக்க அவர் சித்தமுள்ளவராயிருக்கின்றார். இன்று அவருடைய சமுகத்திலே அமர்ந்திருந்து ஜெபம் செய்வாயாக அவரே நம்மை பாவங்களிலிருந்து சுத்திகரிக்க வல்லவராயிருக்கின்றார்.

ஜெபம்:

மன்னிக்கும் தேவனே, என் வாழ்வில் ஏற்படும் பின்னடைவுகளால், நான் உம் சமுகத்தைவிட்டு ஒடிப் போகாதபடிக்கு, உம்மிடமே கிட்டிச் சேர எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 5:32