புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 06, 2021)

ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள்

கலாத்தியர் 5:16

ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த மனிதனானவன், தன் வீட்டிற்கு பின் புறம் உள்ள தோட்டத்திலே சில காய்கறி நாற்றுக்களையும் மூலிகைச் செடிகளையும் நாட்டி, பராமரித்து வந்தான். நாற்றுக்கள் வளர்ந்து பலன் கொடுக்கும் நாட்களிலே, சில வனவிலங்குகள், அந்த தோட்டத்திற்கு வந்து அவைகளை சேதப்படுத்திச் சென்றன. அந்த விலங்குகளினால் விளைச்சலின் பலன் கெட்டுப் போகா தபடிக்கு, அங்கு வரும் விலங்கு களை தினமும் விரட்டுவதில் அநேக நேரத்தை செலவிட்டு, நாளடைவில், அந்த விலங்குகளின் தொல்லைகளால் இளைத்துப் போனான். அவனுடைய பாட்டனார், அவனை நோக்கி: தம்பி, உன் விளைச்சலின் பலனை பாதுகா க்க, தினமும் நீ எவ்வளவோ நேரத் தை விரயப்படுத்துகின்றாய். ஆனால் அப்படி செய்து வருவதினால் உன் னால் உன் விளைச்சல்களை, வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க முடி யவில்லை. எனவே, தோட்டத்தை பாதுகாக்க வேண்டுமாயின் முதலாவ தாக, வீட்டிற்கு பின்புறத்தை சுற்றி நீ வேலியை அடைக்க வேண்டும் என்று கூறினார். பிரியமானவர்களே, அந்த வனவிலங்குகளைப் போல நம்முடைய வாழ்வில் இருக்கும் மாம்ச இச்சைகளை மேற்கொள்வ தற்கு, தேவ பிள்ளைகள், தங்கள் அறிவுக்கெட்டியபடி பல யுக்திகளை மேற்கொள்கின்றார்கள். தங்கள் பெலத்தின்படி பல கிரியைகளை நட ப்பிக்கின்றார்கள். அவைகளால் சில நாட்கள் மட்டும் அல்லது மிஞ்சிப் போனால் சில கிழமைளுக்கு மட்டுமே, தங்கள் மாம்ச இச்சைகளை மேற்கொள்கின்றார்கள். ஆனால், நாளடைவிலே, தங்கள் முயற்ச்சிக ளால் இளைத்துப் போய் விடுகின்றார்கள். மாம்ச இச்சைகளை நம்மு டைய மாம்ச பெலத்தினால் மேற்கொள்ள முடியாது. முதலாவதாக, சத்திய வேதத்தை எங்கள் வாழ்க்கையைச் சுற்றி, வேலியாக போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது, வேதத்தை அதிகதிகமாக வாசித்து, தேவ வார்த்தைகளை தினமும் தியானம் செய்யும் போது, நம்மை மேற் கொள்ளப் பார்க்கும், மாம்ச இச்சைகள் பெலனற்றுப் போய்விடும்;. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களா கும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங் கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே, பெலவீனங்களை மேற்கொள்ளும்படி தினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, ஜெபி யுங்கள். இதனால் உங்கள் உள்ளான மனிதன் கிறிஸ்துவுக்குள் பெலன டைவதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

ஜெபம்:

விடுதலை தரும் தேவனே, மாம்ச இச்சைகள் என்னை மேற்கொள்ளாதபடிக்கு, உம்மிலும் உம்முடைய சத்துவத்தின் வல்லமையிலும் என்னைப் பலப்படுத்தி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:11-13