தியானம் (பங்குனி 05, 2021)
நிலையான நகரம் நமக்கிங்கில்லை
2 கொரிந்தியர் 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ள வைகளாயிருக்கிறது.
ஆண்டவராகிய இயேசு வழியாக மீட்பை பெற்ற பின்பும், பாவம் செய்கின்ற பழைய மனுஷனுடைய சுபாவத்தை எப்படியாக தேவ அழைப்பை பெற்றவர்கள் தங்கள் வாழ்வில் வளர்த்துக் கொள்கின்றார்கள் என்பதைப் பற்றி சில காரியங்களை பார்ப்போம். உண்மையை பேசுவ தற்கு பதிலாக, தங்கள் செய்கைகளை நியாயப்படுத்த பொய்யை பேசு வதற்கு தங்களைத் தாங்களே பயிற் றுவிக்கின்றார்கள். கோபத்தைவிட்டு விடாமல், தங்கள் மாம்சத்திலே மற்ற வர்களை ஜெயிக்கும்படிக்கு கோப த்தை பற்றியெரிய விட்டுவிடுகின்றா ர்கள். நேரடியாக களவு செய்யாவி டினும், நீதியாக உழைப்பதற்கு பதி லாக அநீதியாக பணத்தை தக்கவை க்கும் வழிகளை கைக்கொள்கின்றா ர்கள். பழைய உறவுகளையும் நண்பர்க ளையும் விட்டுவிடாமலிருப்பதால், அவ ர்களோடு கெட்ட வார்த்தைகளை பேசிக் கொள்கின்றார்கள் அல்லது அந்த வார்த்தைகளை பழைய நண்பர்களும்;, பழைய உறவுகளும் பேசும் போது, அவைகளை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதனால், அந்த கெட்ட வார்த்தைகள் இவர்களுக்கு ஒரு குற்றம் போல தோன்றுவதில்லை. வாழ்க்கையிலே ஏற்படும் கருத்து முரண்பாடுகளை, தேவ வார்த்தையின்படி தீர்த்து கொள்வதற்கு பதிலாக, அவைகளை சண்டைகளாக மாற்றி, தங்கள் மாம்சத்திலே போராட்டங்களை நடப்பி க்கின்றார்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குர லும், தூஷணமும், துர்க்குணமும் போன்றவைகளை தங்கள் போராயுத ங்களாக பயன்படுத்துகின்றார்கள். இவைகளினாலே, மீட்கப்படும்நாளு க்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்க ப்படுத்துகின்றார்கள். இவைகள் யாவுமே, ஜென்ம சுபாவத்திற்குரிய பழைய மனுஷனுக்குரிய சுபாவங்களை நம்மில் வளர்வதற்கு நாம்; கொடுக்கும் பழைய மனுஷனுக்குரிய ஆகாரமாயிருக்கும். பிரியமானவர்களே, கோபம், மூர்க்கம், கூக்குரல் சண்டை போன்றவை மாம்சத்தின் பெலன். புதிய மனுஷனுடைய போராயுதங்கள் மாம்ச பெலன் அல்ல. இப்படி ப்பட்ட எண்ணங்கள் எழும்பும் போது, பெருமை, குடும்ப கௌரவம் போன்ற வற்றிற்கு நம்மை கீழ்ப்படியப் பண்ணாமல், நம்மை நாம் கிறிஸ்துவின் சிந்தைக்கு கீழ்படியச் செய்ய வேண்டும். தேவனுடைய வார்த்தைகளையே எங்கள் அனுதின ஆகாரமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஜெபம்:
விடுதலை தரும் சர்வ வல்லமையுள்ள தேவனே, மாம்சத்தின் இச்சைகளை என் போராயுதமாக நான் கொண்டிராமல், உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நீதியின் வழியில் நடக்க கிருபை செய்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபேசியர் 4:25-32