புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 04, 2021)

புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்

எபேசியர் 4:24

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.


ஒரு மனிதன் தன் வீட்டிற்குப் பின்புறமாக ஒரு மாமரத்தை நாட்டி அதை பராமரித்து வந்தான். அதன் கனி மிகவும் புளிப்புள்ளதாயும், உண்ப தற்கு ஏற்றதாயும் இருக்கவில்லை. அடுத்த ஊரிலுள்ள அவனுடைய நண்பன், தன் ஊரிலுள்ள மிகவும் சுவையான கனியைக் கொடுக்கும் ஒரு மாமரத்தை அவனுக்கு கொடுத்தான். அது சிறிய கன்றாக இருந்த தால், அதை நன்றாக வேலியடைத்து பராமரிக்கும்படி கூறியிருந்தான். அந்த மனிதனும் அந்த சிறிய மாமர த்தை வீட்டின் பின்புறத்திலே நாட்டி, வேலியடைத்து பராமரித்து வந்தான். ஆனால், அவன் தன் தோட்டத்தில் இரு ந்த புளிப்புள்ள, உண்பதற்கு ஆகாத மாமரத்தை வெட்டிவிடாமல், அதையும் பசளை போட்டு, நீர்பாய்ச்சி பராமரித்து வந்தான். அந்த மரம் பெரியதாக இருந் ததால், அவன் புதிதாக நாட்டிய சிறிய மாங்கன்றுக்கு போதியளவு சூரிய ஒளியோ, பசளையோ, தண்ணீரோ கிடைக்கவில்லை. அவன் தோட்டத்திலிருந்த புளிப்புள்ள மாமரமோ செழி த்து வளர்ந்தது. சுவை தரும் மாங்கனியைத் தரும் மரமோ, வளர்ச்சி குறைந்த சிறிய கன்றாகவே இருந்தது. பிரியமானவர்களே, நீங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாளிலே, தேவனுடைய பரிசுத்த வித்து உங்கள் இருதயத்தில் விதைக்கபட்டது. அந்த வித்து வளர்ந்து கனி கொடுக்கும் போது, அதன் பலனில் எந்த குறைவும் இருக்காது. அந்த வித்திலிருந்து பாவம் உண்டாகாது. ஆனால், உங்கள் இருதயத்திலிருந்த அழிவுள்ள பலனைக் கொடுக்கும், பகை, வன்மம், கசப்பு போன்ற பழைய மனு~னு க்குரிய சுபாவத்திற்கு நீங்கள் பசளை போட்டு, தண்ணீர் ஊற்றி வளர்க்கக் கூடாது. அதாவது, புதிய மனுஷனுக்குரிய பரிசுத்த வித்து உங்க ளுக்குள் இருக்கின்றது. பழைய மனுஷனுக்குரிய சுபாவம் அழிந்து போகும்படிக்கு, அதை நீங்கள் பராமரிப்பதை விட்டுவிடுங்கள். புதிய மனுஷனுக்குரிய தெய்வீக சுபாவம் உங்கள் வாழ்வை ஆண்;டு கொள்ள இடங்கொடுங்கள். நீங்கள் எதை கருத்துடன் பராமரிக்கின்றீர்களோ, அது உங்களுக்குள் வளர்ந்து அதன் பலனை கொடுக்கும். எனவே, அந்தப்படி, முந்தின நடக்கைக் குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து விடுங்கள். புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரம தந்தையே, நற்கனிகளைக் கொடுக்கும் வாழ்க்கை வாழும்படிக்கு, பழைய மனுஷனுக்குரிய சுபாவங்களை களைந்து, கிறிஸ்துவின் சாயலில் வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 6:9-21