புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 01, 2021)

எனக்கு ஒத்தாசை வரும்

சங்கீதம் 121:1

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.


இரட்சகராகிய இயேசு, இந்த உலகிலே, தம்முடைய திருப்பணியை ஆரம்பிக்கும் நாட்களிலே, அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவா சமாயிருந்தார். உபவாச நாட்கள் முடிந்த பின்பு, அவருக்குப் பசியுண்டா யிற்று. பசி உண்டாகும் வேளையிலே உணவானது ஒரு அத்திய அவசியமான அடிப்படைத் தேவையாகும். அந்த சமயத்திலே, சோதனைக்காரனாகிய பிசாசானவன், அந்த அத்தியாவசியமான தேவையை மையமாக வைத்து, இயேசுவின் சரீர த்தில் ஏற்பட்டிருக்கும் தேவையை குறி த்து கரிசனையுள்ளவன் போல இயேசு வினிடத்தில் வந்தான். நீர் தேவனு டைய குமாரனேயானால், இந்தக் கல் லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். சற்று இந்த சம்பவத்தை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விவசாயி, தன் சிறு தோட்டத்திலே விளையும் காய்கறிகளையும், வாழைப்பழங்களையும் ஊரிலே இருக்கும் சிறிய சந்தைக்கு கொண்டு சென்று, விற்று தன் அனுதின தேவைகளை சந்தித்து வந்தான். ஒரு நாள் அவன் வாழ்விலே ஒரு அத்தியாவசியமான பணத்தேவை ஏற்பட்டுவிட்டது. சனி இரவு, அவனுடைய நண்பன் ஒருவன் அவனிடத்தில் வந்து, நாளை ஞாயிற் றுக்கிழமை, சந்தையிலே அதிக ஜனங்கள் வருவார்கள். அருகிலுள்ள ஊர் ஜனங்களும் அங்கே வருவார்கள். ஆகவே, உன்னுடைய அடிப் படை தேவையை மையமாக வைத்து, இந்த ஞாயிறு மட்டும் நீ ஆலய த்திற்கு போகாமல், சந்தைக்கு போ. சந்தையில் உன் தேவைக்கு அதிகமான பணத்தை நீ சம்பாதிக்கலாம். அதனால் வரும் ஆதாயத்தில் நீ அதிகமாக தேவனுக்கு கொடுக்கலாம் என்று ஆலோசனை கூறினான். சோதனைக்காரனாகிய பிசாசானவன், இயேசுவுக்கு கூறிய ஆலோச னையைப் போலவே, இந்த ஆலோசனையும் இந்த உலகத்தின் பார்வையில் ஏற்புடையதாக இருந்தது. ஆனால், அந்த விவசாயியோ, நண்பனே, ஞாயிறு சந்தையில் இருந்து அல்ல, வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். நான் உழைப்பதற்கு ஆறு நாட்கள் உண்டு எனவே என்னை படைத்த தேவனை ஆராதிக்கும் நேரம் வியாபார நேரம் அல்ல என்று தயவாக பதில் கூறினான். பிரியமானவர்களே, தேவனுடைய வழிகளை அறிந்து கொள்ளுங்கள். இந்த உலகத்தினால் உண்டாகும் ஆலோசனைகளை குறித்து மிகவும் விழிப்புள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் ஆலோசனைகளை நிதானித்து அறிந்து அவைகளை ஜெயம் கொள்ளும்படிக்கு பிரசாமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 4:3-4