புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 28, 2021)

இரக்கமுள்ளவர்களாயிருங்கள்

லூக்கா 6:36

ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.


ஒரு வாலிபனானவன் தன் வீட்டிற்கு பின்புறமாக உள்ள குழியொ ன்றிலே தவறுதலாக விழுந்துவிட்டான். அவனை பாதுகாக்கும்படி அவ னுடைய தந்தையாருக்கு வழியேதும் தெரியவில்லை. காலத்தைத் தாம திக்காமல், உடனடியாக ஊரிலுள்ள தீயணைப்பு படையினருக்கு அழை ப்பு கொடுத்தான். அவர்கள் சீக்கிரமாக வந்து அவருடைய மகனை குழி யிலிருந்து தூக்கிவிட்டார்கள். அவன் எப்படி விழுந்தான்? ஏன் விழுந்தான்? யாரும் தள்ளிவிட்டார்களா? ஏன் பெற் றோர் அவனை கவனிக்கவில்லை? என்ற கேள்விகளை கேட்டு நேரத்தை விரயப்படுத்தாமல், முதலாவதாக மக னானவனை மரணத்தலிருந்து காப்பாற் றிவிட வேண்டும் என்ற நோக்கமுடைய வர்களாக செயற்பட்டார்கள். சில வேளைகளிலே நம்முடைய வாழ்க்கை யிலும் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடப்பது போன்ற அனுபவங்கள் ஏற்படுகின்றது. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை காணும் போது, நம்மைச் சூழவுள்ள மனிதர்கள், இது இவன் செய்த பாவம்! இவன் தேடிக் கொண்ட வினை! இது இவனுக்கு நல்ல பாடம்! என்று பலவி தமாகப் பேசிக் கொள்கின்றார்கள். அதனால், துன்பத்தில் இருக்கும் நமக்கு கைகொடுக்காமல், நம்மேல் இன்னும் அதிக பாரங்களை ஏற்றி விடுகின்றார்கள். சில வேளைகளிலே, மற்றய மனிதர்கள் கடந்து போ கும் துன்பத்தை நாம் காணும்போது நாமும் நம்மை அறியாமல் துன்பத் திலிருக்கும் மனிதர்களுக்கு பெரும் நோவை உண்டாக்கி விடுகின் றோம். நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்க ளைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்;; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? பிரியமான வர்களே, நாம்; மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் மகா இரக்கமுள்ள பரமபிதா எம்மைத் தேற்றி வழிநடத்துகின்றார். அவருடைய பிள்ளைகளாகிய நாமும், அவரைப் போல இரக்கத்தை காண்பிக்க வேண்டும். நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குமுன் யாவரும் அவரண்டை சேரவேண்டும். என்ற மனநிலையுடையவர்களாய், யாவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்.

ஜெபம்:

விடுவிக்கும் தேவனே, நான் துன்பத்தின் நடுவே நடக்கும் போது நீர் துரிதமாக என்னை உயிர்ப்பிக்கின்றீர். அதுபோல மற்றவர்களும் விடுதலையடையும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:1-6

Category Tags: