புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 27, 2021)

தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்

1 தெச 5:6

ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.


ஒரு ஊரிலே வசித்து வந்த வாலிபனொருவன், மிகவும் சிறந்த ஒட்டப் பந்தைய போட்டி வீரனாக திகழ்ந்தான். முன் குறிக்கப்பட்ட நாளிலே அந்த ஊரிலே இடம்பெறவிருக்கும் மாவட்ட ஓட்டப் பந்தயப் போட்டிக்கு பல பயிற்ச்சிகளை செய்து வந்தான். அவன் அந்த ஓட்டப் பந்தயப் போட்டியில் முதலிடத்தை பெற்றுக் கொள்வான் என்பதில் அந்த ஊர் ஜனங்களுக்கு எந்த சந்தேகமும் இரு ந்ததில்லை. அவன் தந்தை அவனை நோக்கி, உடற்பயிற்ச்சி மட்டும் போ தாது, இந்த நாட்களிலே நீ ஆரோக்கி யமாயிருக்கும்படிக்கு உன் நடக்கைக ளை மிகவும் கவனித்துக் கொள் என்று அடிக்கடி கூறிக் கொண்டேயிருந்தார். குறித்த நாளிற்கு முந்தின இராத்திரி யிலே, அவன் தன் நண்பர்களோடு சேர்ந்து ஒரு உணவுச் சாலையயொன்றில் உணவுண்டு வீடு திரும்பினான். அதிகாலை வேளையிலே அவனுக்கு வயிற்றிலே வியாதி உண்டா யிற்று. அவனுக்கு ஒரே வாந்தியும் வயிற்றுப் போக்குமாக இருந்ததால், அந்த ஓட்டப் பந்தயப் போட்டியில் அவனால் கலந்து கொள்ள முடி யாமற் போய்விட்டது. ஆம் அருமையான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை சற்று சிந்தித்து பாருங்கள். ஒரு மணவாட்டி தன்னுடைய திருமண நாளுக்கென்று தன்னை ஆயத்தப்படுத்துகின்றாள். நல்ல வேலைகிடைக்க வேண்டுமெ ன்றிருக்கும் ஒரு மனிதன், வரவிருக்கும் நேர்முகப் பரீட்சைக்கு தன்னை தயார் செய்து கொள்கின்றான். பாடசா லையிலே படிக்கும் மாணவ மாணவிகள், வருட இறுதிப் பரீட்சைக்காக இரவும் பகலும் கருத்துடன் படிக்கின்றார்கள். இவர்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட விசே~ நாளுக் கென்று தங்களைத் தாங்கள் ஆயத்தப் படு த்திக் கொள்கின்றார்கள். அதுபோலவே, நாங்கள் ஒரு விசே~pத்த நாளு க்கென்று ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்க ளைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர் களல்லவே. இந்த உலகத்திலே நாம் செய்யும் எந்தக் காரியமும், அது கல்வியாக இருக்கலாம் அல்லது தொழிலாக இருக்கலாம் அல் லது வேறெந்த காரியமுமாக இருக்கலாம். அவை நாம் எதிர்பார்த்துக் கொண் டிருக்கும் விசே~pத்த நாளுக்கென்று நாம் செய்ய வேண்டிய ஆயத்த த்திற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காதபடிக்கு விழிப்புள்ளவர் களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் இந்தப் பெரி தான அழைப்பைக் குறித்து நான் அசட்டையாக இருக்காதபடிக்கு, உம்மு டைய நாளுக்கென்று ஆயத்தப்பட எமக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:13