புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 26, 2021)

தேவ ஆலோசனைகளை ஆராய்ந்தறியுங்கள்

யோவான் 16:13

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.


ஒரு கிராமத்திலே இயங்கி வந்த எளிமையான சனசமூக நிலையத்தின் தலைவர், அந்த கிராமத்திலுள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு அத்தியா வசியமான அடிப்படைத்; தேவைகளை நிறைவேற்றுவதிலே அதிக கவனம் செலுத்தி வந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்பு, பட்டணத்திலி ருந்து வந்து குடியேறிய ஒரு சில மனிதர்கள் அந்த கிராமத்தின் குடிகளோடு இடைப்பட ஆரம்பித்தார் கள். சில மாதங்கள் சென்ற பின்பு, இந்தக் கிராமத்தில் எல்லாமே சிறப்பாக இருக்கின்றது ஆனால் மக்கள் யாவ ரும் இணைந்து சமூகமாக மகிழ்ந்திருக் கும் மனதிற்கினிய கேளிக்கை நிகழ்ச் சிகள் (Entertainments) மிகவும் குறை வாக உள்ளது எனக் கூறிக் கொண்டா ர்கள். உல்லாசமான நிகழ்சிகளினால் இந்த கிராமத்தின் வருமானத்தை அதிகரிக்கலாம் என தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். இந்த வார்த்தைகளால், பல மனிதர்களை தம்வசப்படுத்திக் கொண்டு, அடுத்த நிர்வாகக்குழு தேர்தலிலே, பட்டணத்திலிருந்து வந்த ஒரு மனிதனை அந்த சனசமூக நிலையத்திற்கு புதிய தலைவராகவும் தெரிவு செய்தா ர்கள்;. இந்தக் காரியம் அந்த கிராமத்தின் நலனை விரும்பி வாழ்ந்த மூப்பர்களுக்கு மனநோவை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டிலே, அந்த கிராமத்திலே, பல கேளிக்கை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டது. பட்டணத்திலிருந்து அதிக ஜனங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண் டதால், அதிக வருமானம் கிடைத்தது. அத்தோடு, பட்டணதிலிருந்து வந்த பல மனிதர்கள், அக்கிராமத்திலே வசித்து வந்த வாலிபர்களுக்கு பல தவறான வழிகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அடுத்த சில ஆண்டுக ளில் அந்தக் கிராமத்திலுள்ள பலர் துன்மார்க்கமான வழிகளை பற்றிக் கொண்டதால் அந்தக் கிராமத்தில் சமுதாய சீர்குலைவு உண்டாயிற்று. பிரியமானவர்களே, நீங்கள் இன்னும் நன்றாக அறியாத மனிதர்கள், தங்கள் மாம்ச இச்சைகளை நிறைவேற்றும்படிக்கு உங்கள் வாழ்க்கை முறை நாகரீகமடைய வேண்டும் என்று, அவர்கள் உங்கள் இருதயத்தில் விதைக்கும் உலக காரியங்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையுள்ளவர் ளாயிருங்கள். வேத வாக்கியங்களோடு அவர்களுடைய கருத்துக்களை ஆராய்ந்து பாருங்கள். அவர்களுடைய ஆலோசனைகளால் பிதாவின் நாமம் உங்கள் வழியாக மகிமைப்படுகிறதா என்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருக்கும் சத்திய ஆவியாவனர் உங்களை வழிநடத்திச் செல்ல இடங்கொடுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு அழைத்த தேவனே, உலக மனிதர்களின் தந்திரமான கண்ணிகளில் நான் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, உம் வார்த்தை யின் வெளிச்சத்தில் நடக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 146:4