புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 25, 2021)

கர்த்தருக்கு பிரியமான ஆராதனை

சங்கீதம் 51:17

தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.


காயீன் ஆபேல் என்ற இரு சகோதரர்கள் கர்த்தருக்கு பலியிடும்படி சென்றார்கள். கர்த்தர் ஆபேலின் பலியை ஏற்றுக் கொண்டார். காயீ னின் பலி அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. ஏனெனில் காயீனு டைய இருதயம் கர்த்தருக்கு பிரியமாக இருக்கவில்லை. சவுல் என்னும் ராஜா தேவ கட்டளைக்குப் விரோதமாக பாவம் செய்தான். அதுபோ லவே, தாவீது என்னும் ராஜாவும் தேவ னுக்கு விரோதமாக பாவம் செய்தான். சவுலின் வழிகளோ கர்த்தருக்கு பிரிய மாக இருக்கவில்லை. அவன் இருதயத் தில் மனத்தாழ்மையும் கீழ்படிவும் இரு க்கவில்லை. அவன் தன் குற்றங்களை அறிக்கையிட்டு விட்டுவிடாமல் தன் குற் றங்களை நியாயப்படுத்துகின்ற ஒரு மனிதனாக இருந்தான். ஆனால், தாவீதின் இருதயமோ எப்போதும் கர் த்தரையே அண்டிக் கொண்டது. அவன் தன்னுடைய பாவங்களை ஏற் றுக் கொண்டு, அதற்காக மிகவும் மனம்வருந்தி, கர்;த்தரிடத்தில் தேவ கிருபைக்காக வேண்டி நின்றான். அதனால் தாவீது கர்த்தருக்கு பிரியமு ள்ளவனானான். ஏசா, யாக்கோபு என்னும் இரு சகோதரர்கள் இருந்தார் கள்;. ஏசா, மூத்த சகோதரனாக இருந்தும், கர்த்தருடைய ஒழுங்குகளை அசட்டை செய்து வந்தான். யாக்கோபோ, கர்த்தரால் வரும் ஆசீர்வாத த்தின் மேன்மையை நன்கு அறிந்தவனாக இருந்தான். மேலே குறிப் பிடப்பட்டுள்ள மூன்று சந்தர்ப்பங்களிலும், இருதயத்தில் பொல்லாத எண்ணங் கொண்டவர்களின் பலிகளையும், வழிகளையும், இதய விரு ப்பங்களையும் கர்த்தர் ஏற்;றுக் கொள்ள மறுத்தார். ஒருவேளை இந்தப் பூமியிலே மனிதர்கள், மற்றய மனிதர்களிடமும், அதிகாரிகளிடமும், பிரப ல்யமான ஸ்தாபனங்களிடமும் அங்கீகாரத்தை நாடித்தேடுகின்றார்கள். இன்றைய ஊடகங்களிலே அதிகப்படியானோர் தங்கள் செயல்களை குறித்த விருப்பத்தை (டுமைந) தெரியப்ப டுத்தினால், பெரு மகிழ்ச்சியடை கின்றார்கள். அதாவது, ஒரு மனிதன், தன் கெம்பீரமான குரலில், பல இசைக் கருவிகளுடன், இனிமையாக கர்த்தரைத் துதிக்கும் பாடலைப் பாடலாம். கேட்கின்றவர்கள் தங்கள் விருப்;பத்தை தெரியப்படுத்தலாம். ஆனால் அந்தத் துதியானது கர்த்தருக்கு ஏற்புடையதாக இருக்காவி ட்டால் அதினால் வரும் பலன் ஒன்றுமில்லை. எனவே, கர்த்தருக்குப் பிரி யமான ஆராதனை செய்யும்படிக்கு, நாம் தேவ சமுகத்திற்கு செல்லும் போது, நம்மை தாழ்த்தி, கீழ்படிதலுள்ள இருதயத்தோடு கர்த்தருக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்த வேண்டும்.

ஜெபம்:

தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிக்கும் தேவனே, உமக்கேற்ற ஆராதனையை நான் செய்யும்படிக்கு, என் இருதயம் உமக்கு முன்பாக ஏற்புடையதாக இருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:23-24