புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 23, 2021)

சோர்வான நாட்கள்?

நீதிமொழிகள் 22:6

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட் களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


இந்த பூமியிலே, காலநிலையானது நாளுக்குநாள் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. சில நாட்களிலே சூரிய வெளிச்சம் இருக்காது. சில நாட்கள் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். சில நாட்கள் உஷ்ணம் நிறை ந்ததாகவும் வறட்சியுமுள்ளதாகவும் இருக்கும். சில நாட்களிலே காற் றும் புயலும் இருக்கும். சில நாட்கள் மழையும் குளிருமாக இருக்கும். இவை வெளியே நாங்கள் காணும் காலநிலை மாற்றங்களாகும். அது போ லவே ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான அனுபவ ங்களுக்கூடாக நாமும் சென்று கொண்டிருக்கின்றோம். சில நாட்கள் வெப்பமும் வறட்சியும் நிறைந்ததாக இருக்கும். வேறு சில நாட்கள், எமக்கு மப்பும் மந் தாரமும் போலவும், மழையும் குளிருமாகவும் இருக்கும். இன்னும் சிலநாட்கள் காற்றும் புயலும் நம் வாழ்க்கைப்படகில் மோதுவதைப் போல இருக்கும். இவைகளினால் நம்மு டைய வாழ்க்கையிலே பல மனச்சோர்வுகள், துன்பங்கள், மனநோவுகள், நஷ்டங்கள், இழப்புக்கள், மற்றும் பல சவால்கள் ஏற்படுவதுண்டு. சில தேவ பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையின் சில கட்டங்களிலே தேவ னை நினையாமல் போகும்படிக்கு பல உபத்திரவங்கள் அவர்களை சூழந்து கொள்கின்றது. ஆனால், இந்தப் பூமியிலே நாம் வாழும் ஒவ் வொரு நாளும் கர்த்தர் நமக்குத் தந்த நாளாயிருக்கிறது. தேவனாகிய கர்த் தர் தம்முடைய பிள்ளைகளுக்கு அருளின தம்முடைய ஆவியானவர் நம் உள்ளத்தில் வாசம் செய்கின்றார். நாம் கஷ்டமானதும் நஷ்டமானது மான நாட்களை கடந்து செல்லும் போது நமக்குள் இருக்கும் தேவ ஆவியானவர் மகிழ்ந்துகளிகூருகிறவரல்லர். மாறாக அவர் வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக தேவனிடத்தில் வாஞ்சை யோடு விண்ணப்பம் செய்கின்றார். நாம் தேவனை நினையாத நேரத்திலும் அவர் நம்முடைய நினைவாகவே இருக்கின்றார். நாட்கள் மாறிப் போகலாம், சூழ்நிலைகளினாலே நாம் நம்பியிருந்த மனிதர்கள் நமக்கு உதவி செய்ய முடியாமல் போகலாம், வேறு சிலர் நமக்கு துரோகம் செய்யலாம் அல்லது நாம் வேறு சிலருக்கு துரோகம் செய்யலாம். ஆனால் எல்லா நாட்களும் கர்த்தருடைய அதிகாரத்திற்குட்பட்டிருக்கின்றது. அவர் உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு இருப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கின்றார். கர்த்தரை அறியாமல் நமது வாழ்க்கையில் எதுவும்; ஏற்படாது. அவர் திக்கற் றோராய் நம்மை ஒரு நாளும் கைவிடமாட்டார்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, இந்தப் பூமியிலே என்னுடைய நாட் கள் வேறுபட்டதாக இருப்பினும், மாறாத உம்மை பற்றிக் கொண்டு, உம் மி ல் நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 49:16