புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 22, 2021)

சுகம் தரும் ஜீவ வார்த்தைகள்

நீதிமொழிகள் 4:22

அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.


சிறு பிள்ளைகள் வியாதிப்பட்டிருக்கும் வேளையில் மருந்துகளை எடுப்பதற்கு மிகவும் தயக்கம் காண்பிப்பார்கள். பொதுவாக, மருந்துகள் கசப்புள்ளதாக இருப்பதால் அதை உட்கொள்ளுவதற்காக நாவுக்கு இதமாக இருக்கும்படிக்கு, உற்பத்தியாளர்கள் கொஞ்சம் இனிப்பை சேர்த்துக் கொள்கின்றார்கள். ஆனால், மருந்துடன் இனிப்பை சேர்த்துக் கொண்டாலும், பலர் மருந்தையல்ல அதை சுற்றியுள்ள இனிப்பையே விரும் பிக் கொள்கின்றார்கள். கர்த்தருடைய வார்த்தைகள் நம்முடைய ஆன்மீக உணவாகவும், அருமருந்தாகவும் இருக் கின்றது. எங்கள் சரீர சுகத்தை பேணிப் பாதுகாக்கும்படி அனுதினமும் நாம் உணவை உட்கொள்கின்றோம். அது போல ஆன்மீக உணவு இல்லை யென்றால் ஆத்துமா பாவத்திலே மரித் துப் போய்விடும். எனவே கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தினமும் படித்து, அதனால் நம்முடைய ஆத்துமாவை உயிரடையச் செய்ய வேண்டும். கர்த்தருடைய வார்த்தையே ஆத்துமாவின் அருமருந்து. நோய் கொண்ட ஆத்துமாவை கர்த்தருடைய வேதம் ஆரோக்கிய மடையச் செய்யும். “அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்ப தாக. அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைக ளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உட லுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.” சில வேளைகளிலே, அந்த மருந் தை உட்கொள்வது உங்களுக்கு கசப்பான அனுபவமாக இருக்கலாம். அதனால் மருந்துடன் இனிப்பையும் சேர்த்துக் கொள்ளுவதுபோல் சிலர் சத்திய வேதம் கூறும் அருமருந்தையும் இனிப்பேற்றிக் கொடுக்கப் பார்க் கின்றார்கள். ஆனால், மனிதர்களோ, அருமருந்தை விட்டுவிட்டு சுற்றியு ள்ள இனிப்பை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றார்கள். கர்த்தர் தமது வசனத்தை அனுப்பி தம்முடைய பிள்ளைகளைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். இன்று பலர் தங்களுடைய சரீர சுகம் அடைந்தால் போதும் என்று வாழ்கின்றார்கள். சரீர சுகம் மிகவும் அவசியமானதுதான் ஆனால் ஆன்மீக சுகமானது இன்றியமையாதது. சரீ ரத்தில் ஏற்படும் நோய் செய்யக்கூடிய மிகப்பெரிதான பயங்கரம் மர ணம். அதாவது இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும் சரீர மரணம். ஆனால் ஆன்மீக நோயை நாம் குணப்படுத்தாமல் விட்டுவிட்டால் அத னால் நித்திய மரணம் ஏற்படும். எனவே சத்திய வேதத்தை வாஞ்சியுங்கள்.

ஜெபம்:

சுகம் தரும் கர்த்தாவே, என் ஆத்துமா ஆரோக்கியமாக இருக்கும்படிக்கு உம்முடைய ஜீவ வார்த்தைகளை நான் எப்போதும் தியானித்து அதன்படி வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 1:1-4