புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 20, 2021)

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

ஆபகூக் 2:4

தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.


ஒரு காலகட்டத்திலே தேவனால் தெரிந்து கொள்ளபட்ட ஜனங்கள், தங்களை அழைத்தவரை மறந்து, சர்வ வல்லவருடைய வார்த்தைகளை புறம்பே தள்ளி, அக்கிரமத்தினாலே தங்கள் தேசத்தை நிறைத்துக் கொண்டார்கள். கர்த்தர் கிருபையாய் அவர்கள் மேல் நீடிய பொறுமை யுள்ளவராய் இருந்தார். ஆனால் தேவ கிருபையை அவர்கள் அசட்டை செய் தார்கள். அவர்கள் விழிப்படையும்படி க்கு, பாபிலோனின் ராஜாவை அவர்க ளுக்கு எதிராக அனுமதித்திருந்தார். ஆனால் பாபிலோனியரோ, ராஜாக்களை ஆகடியம்பண்ணி, அதிபதி களை பரிகாசம் பண்ணி, தங்களை எதிர்க்கும் ராஜ்யங்களின் அரண்க ளையெல்லாம் பார்த்து நகைத்து, எதிரிகளின் அரண்களை சுற்றி மண் மேடுகளைக் குவித்து எதிரிகளின் அரண்களுக்கு மேலாக ஏறிச் சென் றார்கள். அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்;. அவர்கள் போகு மிடமெல்லாம் தங்கள் எதிரிகளை மேற்கொண்டார்கள். ஆனால் அவர்க ளுடைய நியாயம் கர்த்தரால் உண்டானதல்ல. அவர்கள் தங்களுக்கு தாங்கள் நியமித்த வழிகளே அவர்களுடைய நியாயமும் அவர்களு டைய மேன்மையுமாக எண்ணினார்கள். சற்று இந்த சம்பவத்தை சிந்தித்துப் பாருங்கள். பாபிலோனியர், போகுமிடமெல்லாம் தங்கள் பகைஞரை மிதித்துப் போட்டார்கள். தோல்வி என்ற பேச்சுக்கு இடமி ல்லை. எனவே அவர்கள் தாங்கள் வெற்றி வாழ்க்கை வாழ்கின்றோம் என்று அகங்காரம் கொண்டு, தங்கள் வழிகளெல்லாம் மேன்மையானது நியாயமானதுமென வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் பரலோகத் தில் சர்வ வல்லமையுள்ள தேவன் ஒருவர் இருக்கின்றார் என்பதை மறந்து போனார்கள். அந்நாட்களிலே கர்த்தர் தம் ஊழியராகிய ஆபகூ க்கை நோக்கி: குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிரு க்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாம திப்பதில்லை. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத் துமா அவனுக்குள் செம்மையானதல்ல. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று கூறினார். அதாவது, எங்கள் வாழ்க்கையில் உண்டா கும் தொடர்ச்சியான வெற்றியை மேன்மைபாராட்டி, அதனால் நாங்கள் மேன்மையுள்ளவர்கள் என்று ஒருபோதும் எண்ணிவிடக்கூடாது. எங்கள் ஆத்துமா, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மேல் விசுவாசமாக இருப்பதே எங்கள் மேன்மை. அவருடைய வழியே நித்திய வாழ்வின் வழி. அவருடைய நியாயமே நியாயம். அவருடைய நீதியே நித்திய நீதி.

ஜெபம்:

பராகிரமமுள்ள தேவனே, உம்மேல் விசுவாசமாக இருப்பதே என் வாழ்வின் மேன்மை என்பதை உணர்ந்து உம்முடைய செம்மையான நீதியின் வழியிலே நான் நடக்க எனக்குக் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 10:27-19