புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 19, 2021)

தேவ சித்தம் நிறைவேற இடங்கொடுங்கள்

நீதிமொழிகள் 14:12

மனுஷனுக்குச் செம்மை யாய்த் தோன்றுகிற வழி உண்டு. அதின் முடிவோ மரண வழிகள்.


“இது உன்னுடைய வாழ்க்கை, நீயே உனக்கு ராஜா, உன் வாழ்க்கை யில் நீ விரும்பியதைச் செய், உன் கனவை நீயே பின்பற்று, விரும்பி யதை படி, விரும்பிய வேலையைச் செய், உனக்கு உண்மையாயிரு” என்னும் எண்ணக் கருக்களே இன்றைய உலகிலே பிள்ளைகளின் சிறு வயதிலிருந்து அவர்கள் உள்ளத்திலே சிந்தைகளாக விதைக்கப்பட்டு வருகின்றது. இன்று உலக பிரசித்தி பெற்ற திரைப்பட ஸ்தாபனங்களால் உருவாக்கப்படும் திரைப்படங்களும், நாடகங்களும், கலந்துரையாடல்களும் இத்தகைய போக்கையுடையதாகவே இருக்கின்றது. அது மட்டுமல்ல, பல கல்வி நிலையங்களும் சிறுவர்களுக்கு இதற்கொத்த ஆலோசனைகளையே கொடுத்து வருகின்றார்கள்” என்று மேற்கத்தைய நாட்டை சேர்ந்த தேவ ஊழியரொருவர் கூறினார். மேற்குறிப்பிட்ட ஸ்தாபனங்கள் மட்டுமல்ல, இன்று பல பெற்றோர்களும் “பிதாவாகிய தேவனுடைய சித்தம்” என்று கூறும் போது, அது நாம் கூடிவரும் ஆலயமும், ஆராதனைகளுக்கு முரிய ஒழுங்கு மட்டுமே என எண்ணிக் கொள்கின்றார்கள். தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே நம்மை பெயர் சொல்லி அழைத்த நம் பிதாவாகிய தேவன், ஒவ்வொருவருக்கும் தனித்துவமானதும் பிரத் தியேகமானதுமான திட்டத்தை வைத்திருக்கின்றார். அது ஆலயத்திற்கு சென்று வருவதும், ஆராதனைகளில் ஈடுபடுவது மட்டுமல்ல. அது நம்மு டைய முழு வாழ்க்கைக்குமுரியதாயிருக்கின்றது. நம் வாழ்வில்; நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானங்களும் நம்முடைய வாழ்க்கையை மாற் றியமைக்கின்றது. எனவே நமது தீர்மானங்களானது பிதாவாகிய தேவ னுடைய பரிபூரண சித்தத்தை” நம் வாழ்வில் நிறை வேறுவதற்குத் தடை யாக இருக்காதபடிக்கு அவருடைய சித்தம் எங்கள் வாழ்வில் நிறை வேற இடங் கொடுக்க வேண்டும். இன்று பலர் தங்கள் வாழ்வில் கல்வி, வேலை, வீடு, குடும்பம், உறவு, திருமணம், உல்லாசப் பயணம் என்று பல காரியங்களைத் தங்கள் எண்ணப்படி வரையறுத்து எழுதிவிட்டு, பிதாவாகிய தேவன் அதில் கையொப்பம் இட்டு ஆசீர்வதிக்க வேண் டும் என்று எதிர்பார்த்திருக்கின்றார்கள். மனிதர்களுக்கு நன்மையாகத் தோன்றும் காரியங்கள் எல்லாம்;, நம்முடைய வாழ்க்கையில் பிதா வாகிய தேவன் முன்குறித்த திட்டமாக இருக்கப்போவதில்லை. எனவே வாழ்வில் தீர்மானங்களை எடுக்கமுன்பு அது தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குட்பட்டதாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, மனிதர்களுடைய திட்டத்திற்கோ அல்லது என்னுடைய சுயதிட்டத்திற்கோ நான் என்னை ஒப்புக் கொடுக்காமல் உம் திருச்சித்தத்தையே நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 6:38