புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 18, 2021)

கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்

நீதிமொழிகள் 19:21

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.


ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, வாழ்ந்து வந்த இளைஞன் தான் வாழ்வில் முன்னேற்றமடையும்படி பட்டணத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையுள்ளவனாக இருந்து வந்தான். அவன் வசித்து வந்த அந்த ஊரிலே, அவன் குடும்பம் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந் தது. சிறிய ஊராக இருந்ததினால், அயலிலே ஒருவரை ஒருவர் அறிந்தி ருந்தார்கள். ஊரிலே சில கட்டுப்பாடுகள் இருந்தது. அவன் குடும்பத் திலே சில வரையறைகள் இருந்தன. அவன் ஆராதிக்கச் செல்லும் ஆலயத் திலும் சில ஒழுங்கு முறைகள் இருந் தன. அந்தக் கட்டுப்பாடுகள், வரைய றைகள், ஒழுங்கு முறைகளினால் அவ்வப்போது சில அசௌகரியங்கள் அவனுக்கு ஏற்பட்டிருந்தாலும் அவை கள் தன் வாழ்க்கையை நெறிப்படு த்தும் எல்லைகள் என்பதை அவன் உணராதிருந்தான். பெற்றோரின் கடி ந்து கொள்ளுதலும், சமுகத்தினரின் புத்திமதியும் சபையோரின் ஆலோ சனையும் என்னை அடிமையைப் போல நடத்துகின்றது என எண்ணிக் கொண்டான். அதினால், அவன் சுதந்திரத்தை நாடி பட்டணத்திற்கு சென் றான். தற்போது அவன் வசிக்கும் நாகரீகமான பட்டணத்திலே, அவன் விரும்பிய எல்லாவற்றையும் செய்து கொள்ளக்கூடிய வசதிகள் அவனு க்கு கிடைத்தது. அவன் பாவம் செய்தாலும், இவன் யார் என்று திரும்பி பார்ப்பதற்கு கூட அந்த பட்டணத்திலே ஒருவரும் இல்லை. இது தன க்கு கிடைத்த பெரிய விடுதலை என்று அவன் கூறிக் கொண்டான். கிடைக்கும் நேரம் எல்லாம் கடுமையாக உழைத்தான். படைத்த ஆண்ட வரை சிந்திக்க அவனுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. பணம் அதிகக திகமாக அவனுக்கு கிடைத்தது. அதினால் அவன் உள்ளத்தை பொருளாசை பற்றிக் கொண்டது. விடுதலையை நாடிச் சென்றவன் இப் போது எல்லா தீமைக்கும் வேராகிய பண ஆசைக்கு அடிமையானதை உணராதிருந்தான். ஆம், பிரியமானவர்களே, வாலிபர்கள் மட்டுமல்ல, இன் னும் அநேகர், தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று சில தீர்மானங் களை தங்கள் வாழ்க்கையில் எடுத்து, பாதாளத்திற்கு கொண்டு செல் லும் அடிமைத்தன கட்டுகளில் சிக்கிக் கொள்கின்றார்கள். அவைகள் இந்த உலக போக்கிற்குப் பெரும் ஆடம்பரமாக இருக்கலாம் ஆனால் ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கி கொண்டாலும் தன் ஆத்துமாவிற்கு கேடு விளைவித்தால் அதனால் வரும் இலாபம் என்ன? ஒன்றுமில்லை.

ஜெபம்:

விடுதலை தரும் தேவனே, நானே என் ஆத்துமாவை அடிமை த்தனத்திற்குட்படுத்தும் சந்தர்ப்பங்களை முற்றாக தவிர்த்து, உம்முடைய ஆலோசனையின்படி உமக்குக் கீழ்ப்படிந்து நடக்க துணைபுரிவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:24-27