புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 17, 2021)

வாழ்க்கைப் பயணம்

எபிரெயர் 12:2

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.


மனிதர்கள் தங்ளுடைய அனுதின வாழ்க்கையிலே பல சிறிய பயண ங்களை மேற்கொள்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, மாணவர்கள் பாட சாலைக்கு செல்கின்றார்கள். பெரியவர்கள் தொழிற்சாலைக்கு செல்கின் றார்கள். சிலர் வைத்தியசாலைக்கு செல்கின்றார்கள் இப்படியாக ஒவ்வொரு பயணங்களிலும் அவர்கள் செய்து முடிக்க வேண்டிய முக்கிய காரியம் ஒன்று இருக்கும். பாடசாலைக்கு செல்லும் மாணவன் போகும் வழியில் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டு செல்லலாம் ஆனால் அது பாடசாலைக்கு செல்லும் முக்கிய மான நோக்கம் அல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்மைத் தாழ்த்தி, பரலோகத்திலிருந்து இறங்கி, இந்த பூவுலகில் ஒரு மனிதனாகப் பிறந்தார். அவர் இந்த உலகத்தில் இருக்கும் போது எப்போதும் நன்மை செய்கின்ற வராகவே சுற்றித் திரிந்தார். ஆனால், அவர் இந்த பூவுலகிலே செய்து முடிக்க வேண்டிய பிரதானமான நோக் கம் என்ன என்பதை அவர் அறிந்திருந்தார். மனித குலமானது பாவத் திலிருந்து மீட்படையும் வழியை உண்டு பண்ணும்படிக்கு தம்மை தாம் சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்ற பிரதான இல க்கை நோக்கி அவர் பயணம் செய்தார். இனிவரவிருக்கும் ஈடு இணை யில்லாத மகிமையை விசுவாசக் கண்களினாலே கண்டு, தமக்கு முன் வைக்கப்பட்டிருந்த அவமானத்தையும், நிந்தையையும், பாடுகளையும் சகித்துக் கொண்டார். இந் நாட்களிலே, உலகத்திலே பல மனிதர்கள் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை அதிகதிகமாக தியானிக்கின்றார்கள். அது நல்லது. ஆனால் அந்தத் தியானமானது, நாம் ஆண்டவர் இயேசு இவ்வளவு பாடுகளைப்பட்டார் என்று அழுது புலம்புவதற்காக அல்ல. அவர் மறுபடியும் வரும் நாளிலே நாம் அழுது புலம்பாமல் அவர் வருக் கைக்கு ஆயத்தமாய் இருக்கும்படிக்கு இந்நாட்களிலே, நமக்கு வரும் பாடுகளையும் அவமானங்களையும் நாம் சகித்துக் கொண்டு, பிதாவாகிய தேவனின் திருச்சித்தம் நம் வாழ்க்கையிலே நிறைவேற்றி முடிப்பதைக் குறித்ததாகவே நம் வாழ்வு இருக்க வேண்டும். நம் வாழ்க்கையிலே பல சிறிய பயணங்களை நாம் மேற்கொண்டு வருகின்ற வேளையிலே, நம்முடைய பிரதானமான பயணத்தை மறந்து போய்விடாதிருப்போமாக.

ஜெபம்:

அன்புள்ள பரம தந்தையே, இந்த உலகத்திலே ஏன் வாழ்க்கிறேன் என்ற மகிமைக்குரிய நோக்கத்தை நான் உணர்ந்து கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:12