புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 16, 2021)

வழிநடத்திச் செல்லும் கர்த்தர்

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்;. திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.


ஆண்டவராகிய இயேசுவின் தாயாகிய மரியாளும் யோசேப்பும் நாசரேத்து என்னும் ஒரு சிறிய ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். ஆனால், தீர்க்கதரிசிகளின் முன்னுரைப்பின்படி மீட்பராகிய இயேசு பெத்லகேம் என்னும் வேறுறொரு ஊரில் பிறக்க வேண்டும். குறித்த நாள் வந்த போது, மரியாளும் யோசேப்பும் குடி மதிப்பு எழுதுவதற்காக பெத்லகேம் ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே மரியாளுக்கு பிரசவம் ஏற்ப ட்டு, தீர்க்கர் வாக்கின்படி மீட்பராகிய இயேசு பெத்லகேமில் பிறந்தார். அந்நா ட்களிலே, ஆட்சி செய்த ஏரோது ராஜா, இயேசுவை கொல்லும்படி திட்டமிட்டு இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் யாவையையும் கொல்லும்படி கட்டளை யிட்டான். அதற்கு முன்னதாகவே, கர்த்தருடைய தூதன் சொப்பனத் தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலை செய் யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ. பிள்ளை யின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான். பிரியமானவர்களே, மேலே கூறப் பட்ட சம்பவங்களைப் பாருங்கள். தேவ வழிநடத்துதலைப் பாருங்கள். தமக்குப் பயந்து தமது வேளைக்கு காத்திருக்கின்றவர்களுக்கு எங்கு செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும், என்ன செய்ய வேண் டும் என்று தேவன் தெளிவாக வழிநடத்திச் செல்கின்றார். சில வேளை களிலே, நம் வாழ்க்கiயில் சில வழிகள், சில தீர்மானங்கள், நம் கண்களுக்கு நன்மைபோல தோன்றலாம். தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் அவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் வழிகளை அவருக்கு ஒப்புக் கொடுங்கள். உங்கள் எண்ணப்படி முடிவுகளை எடுக் காமல் தேவ வழிடத்துதலுக்காக காத்திருங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, வாழ்க்கையில் எந்த ஒரு தீர்மா னத்தையும் உமது சித்தப்படி எடுக்கும்படிக்கு நீர் எனக்கு உமது வழியை போதித்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 32:8