புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 15, 2021)

மனத்தாழ்மையுடன் காத்திருங்கள்

பிரசங்கி 3:11

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்


அக்காலத்திலே, ஏலி என்னும் பெயருடைய ஆசாரியனொருவன் இருந் தான். அவனுக்கு ஒப்னி பினெகாஸ் என்னும் பெயர்களையுடைய இர ண்டு குமாரர்; இருந்தார்கள். ஒப்னியும் பினெகாசும் ஆசாரிய ஊழிய த்திற்குரியவர்களும், ஆலயத்திலே இருப்பவர்களுமாக இருந்த போதும் அவர்கள் துன்மார்க்கரும் கர்த்தரை அறியாதவர்களுமாயிருந்தார்கள். அவர்கள் தங்கள் தந்தை ஏலியின் அறிவுரைக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள். ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது. அவர்கள் மத்தியிலே, பிறப்பதற்கு முன்னமே, தேவ ஊழி யத்திற்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட சாமுவேல் என்னும் சிறு பிள்ளை யாண்டான் ஆலயத்திலிருந்து வளர்ந்து வந்தான். சாமுவேலின் தந்தை யின் பெயர் எல்கானா. அவன் தாயாரின் பெயர் அன்னாள். தேவனா கிய கர்த்தர் சாமுவேலைக் குறித்து ஒரு திட்டத்தை வைத்திருந்தார். சாமுவேல், துன்மார்க்க வாழ்க்கை வாழும் ஆசாரியனுடைய குமாரரா கிய ஒப்னி பினெகாஸ் மத்தியில் வளர்ந்து வந்தாலும், பிள்ளையாண் டான் ஆசாரியனாகிய ஏலிக்கு கீழ்ப்படிவுள்ள பிள்ளையாக இருந்து வந் தான். சாமுவேலைக் குறித்த தேவனுடைய சித்தம் அவனில் நிறைவேறு வதற்கு எந்த காரியமும் தடை செய்ய முடியவில்லை. கர்த்தரால் குறித்த காலத்திலே, அவன்; சமஸ்த இரஸ்ரவேலுக்கும் நியாயாதிப தியாகவும், தீர்க்கதரிசியாவும் ஏற்படுத்தப்பட்டான். பிரியமானவர்களே, கர்த்தர் முன்குறித்த காரியத்தை யாரும் தடை செய்ய முடியாது. அவர் முன்குறித்த காரியம், அவருடைய சித்தப்படி, அவர் முன்குறித்த நேரத் திலே நடைபெறும். எனவே, உங்களை குறித்த தேவ சித்தம் நிறைவே றும்படி பொறுமையோடு காத்திருங்கள். காத்திருப்பு காலத்திலே, உங்கள் மனத் தாழ்மையும், கீழ்ப்படிவும் கிரியைகளினாலே வெளிப்ப டுத்தப்பட வேண்டும். சூழ்நிலைகள் தேவனுடைய சித்தத்திற்கு எதிராக இருக்கின்றது என்று நீங்கள் வாதுக்கும் வழக்கிற்கும் சென்று விடாதிருங்கள். இப்படியாக, சில அநியாயங்களை காணும் போது, சில மனிதர்கள் தங்கள் மாம்ச பெலத்தினால் அவைகளை தீர்க்க முற்படு கின்றார்கள். அவைகளினாலே அவர்கள் தங்கள் வாசனையை கெடுத் துக் கொள்கின்றார்கள். சிலர் பின்மாற்றமடைந்து போய் விடுகின்றார் கள். தேவ சித்தம் நிறைவேற வேண்டும் என்று நீங்கள் ஒரு திட்டத்தைப் போடாமல், அவருடைய நேரத்திற்குக் காத்திருங்கள்.

ஜெபம்:

வாக்குரைத்த தேவனே, நீர் சொன்ன வார்த்தை, நீர் முன்குறித்த நேரத்திலே நிறைவேறும் என்னும் உண்மையை மறந்து போய்விடாமல் மனத்தாழ்மையுடனும் கீழ்ப்படிதலுடன் காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசேக்கியல் 12:28