புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 13, 2021)

தியானம் செய்தல்

யாக்கோபு 1:22

அல்லாமலும், நீங்கள் உங் களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.


இஸ்ரவேலைச் சேர்ந்த சவுல் என்னும் ஒரு சாதாரண மனிதனை, கர்த்தர் சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக அபிN~கம் செய்தார். ஆனால், சவுல் ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்திய பின்பு, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனான். அது மாத்திரம் அல்ல, தன் கீழ்ப்படியாமையை ஒப்புக் கொண்டு கர்த்தரிடம் திரும்பாமல், தன் கீழ்ப்படியாமையை நியாயப்படுத்தியும்; கொண்டான் என்ற சம்பவத்தை படித்த ஒரு இளம் வாலிபன், “சவுலை கர்த் தர் இவ்வளவாய் உயர்த்தியிருக்க அவன் சற்றும் நன்றியற்றவனாய் எவ்வளவு மதியீனமாய் நடந்து கொண் டான்” என்று தன் தந்தையிடம் கூறி னான். பரிசுத்த வேதாகமத்திலே குறி ப்பிடப்பட்ட இந்த சம்பவமானது வாசி ப்பதற்கு ஒரு அருமையான உண் மைக் கதை. அதை வாசித்த அந்த வாலிபன், தான் ஒரு மூன்றாம் நபர் போல, ஒரு கதைப் புத்தகத்தை வாசிப்பதைப் போல வாசித்துவிட்டு, தன் விமர்சனத்தைக் கூறிய பின்பு தன்பாட்டிற்குச் சென்றுவிட்டான். பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் போது, அவ்வண்ணமாக மூன்றாம் நபரைப் போல வாசிப்பதால் எங்கள் வாழ்க்கைக்கு பலன் இல்லை. ஜீவன் தரும் வேத வார்த்தைக்குள் எங்கள் வாழ்வை இணைத்தவர்களாக நாங்கள் வேதத்தை தினமும் படிக்க வேண்டும். சவுலை தேவன் எப்படி அழைத்தார் என்பதை வாசிக்கும் போது அவர் என்னை எப்படி அழைத்தார் என்று தியானிக்க வேண்டும். சவுலுக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தார் அதுபோல எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கின்றார். மேலே குறிப்பிடப்பட்ட அந்த இளம் வாலிபன் தன் வாழ்க்கையில் கொடு க்கப்பட்ட சிறிய பொறுப்புக்களைக்கூட நிறைவேற்றி முடிப்பதில்லை. அதை அவன் தந்தை சுட்டிக் காட்டும் போது, தன் தவறுகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, தன் நிலமையை நியாயப்படுத்த முயற்ச்சி செய்வான். அப்படியாக அந்த வாலிபன் தன் வாழ்க்கையை கொண்டு செல்பவனாக இருந்தால் அவன் முடிவு எப்படி இருக்கும்? இப்படியாக நாம் சத்திய வேதத்தை வாசிக்கும் போது, ஜீவ வார்த்தைகள் வழியாக என்னுடைய வாழ்க்கையில் நான்;, இப்போது எதை கற்றுக் கொண்டேன். எப்படியாக என் வாழ்க்கையை நான் மாற்றியமைக்கப் போகின்றேன் என்ற சிந்தை நம்மில் எப்போதும் காணப்பட வேண்டும்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நித்திய ஜீவனைத் தரும் திருவார்த்தைகளை வாசிக்கும் போது, அதை தியானித்து, அதன்படி என் வாழ்வை நான் மாற்றிக் கொள்ளும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:16