புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 12, 2021)

நிலைத்திருந்து கனி கொடுங்கள்

எபேசியர் 4:14

நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,


ஒரு கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன், வகுப்பில் ஆசிரியர் கணித பாடத்தை கற்றுக் கொடுக்கும் வேளையிலே, அடுத்த வகுப்பில், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் சுகா தாரக் கல்வியை மிகவும் சுவாரசியமாக கற்றுக் கொடுத்துக் கொண்டி ருந்தார். தன் வகுப்பிலுள்ள கணித ஆசிரியர், வரவிருக்கும் தவணைச் சோதனைக்கு ஆயத்தப்படுத்து முகமாக முக்கியமாக சில கணித சூத்திரங்களை பற்றி மறுசீராய்வு செய்து கொண்டிருக்கும் வேளை யிலே, இவன் அடுத்த வகுப்பிலுள்ள ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் சுகா தாரக் கல்விக்கு செவி கொடுத்து தன் புலனை அதிலே செலுத்திக் கொண் டிருந்தான். தவணைச் சோதனை வந்த போது அவன் கணித பாடத்தி லே மிகவும் குறைந்த புள்ளிகளை எடுத்து சித்தியடையாமற் போனான். பிரியமானவர்களே, நம் ஒவ்வொரு வருக்கும் ஒரு குடும்பம் உண்டு. அந்த குடும்பம் எப்படி செயற்பட வேண் டும் என்று ஒழுங்கு முறைகளை பரிசுத்த வேதாகமம் கற்றுக் கொடுக்கி ன்றது. அதுபோலவே நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சபை உண்டு. சபை யில் எப்படியாக நாம் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறைகளை பரிசுத்த வேதாகமம் நமக்கு கூறுகின்றது. நம் எல்லோருக்கும் பிரதான மேய்ப்பராக ஆண்டவர் இயேசு இருக்கின்றார். ஆனால், இந்த உலகி லே எங்களை நடத்திச் செல்லும்படிக்கு சபையிலே கர்த்தர் ஒரு மேய் ப்பனை நியமித்திருக்கின்றார். அதை நீங்கள் விசுவாசித்தால், உங்கள் சபையில் ஞாயிறு தோறும் போதிக்கப்படும் தேவ வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். உங்கள் மேய்ப்பனே உங்கள் நிலைமையையும், உங்கள் பெலத்தையும் பெலவீனத்தையும், நீங்கள் எந்த சோதனையில் விழுந்து போகின்றீர்கள் என்பதையும் அதிகமாக அறிந்திருப்பார். என வே மனு~ருடைய சூதும் வஞ்சிக்கிறதற் கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், பரிசுத்த வேதாகமத்தை தினமும் கருத்து டன் படியுங்கள், ஊக்கமாக ஜெபியுங்கள், சபைகூடிவருதலை சிலர்விட் டுவிடுவதைப் போல நீங்களும் விட்டுவிடாதிருங்கள். உங்கள் கீழ்ப்படி தலை சபையின் அதிகாரங்களுக்கு செயலிலே காண்பியுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் நியமித்த அதிகாரங்களுக்கு நான் மனதார கீழ்ப்படிந்து, ஒருமைப்பாட்டிலும் ஐக்கியத்திலும் தேறும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்

மாலைத் தியானம் - 1 தெச 5:12-13