புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 11, 2021)

முன்னானவைகளை நாடி…

பிலிப்பியர் 3:13

பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி…


ரோமருடைய ஆட்சிக் காலத்திலே, பவுல் என்னும் ஒரு யூதமத வைராக்கியமுள்ள மனிதன் இருந்தார். இவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை அறியாததினாலே, மீட்பின் நற்செய்தியை அறிவிக்கும் கிறிஸ்தவர்களை கைது செய்து, சபையோரை துன்பப் படுத்தி வந்தார். ஒரு நாள், அவர் கிறிஸ்தவர்களை தங்கள் மதச் சட்டப்படி கைது செய்யும்படி ஒரு ஊருக்கு போய் கொண்டிருக்கும் வேளையிலே ஆண்டவராகிய இயே சுவே மெய்யான தெய்வம் என்பதை அறிந்து கொண்டார். கிறிஸ்தவர் களை காரணமின்றி துன்புறுத்திய இவர், பல நாடுகளுக்கு கப்பல் வழி யாகப் பிரயாணம் செய்து இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்றும், மனித குலத்தை மீட்கும்படி இயேசு கிறிஸ்து தம்மைப் பலியாக சிலுவையிலே ஒப்புக் கொடுத்தார் என்றும் இயேசு கிறிஸ்து வழியாக பாவ மீட்பு உண்டு என்ற நற்செ ய்தியை அறிவித்து வந்தார். அதனால், யூதர்களும் ரோமர்களும் பவுல் மேல் கோபம் கொண்டு அவரை கொன்று போடும்படி கைது செய்தா ர்கள். அவரை கடல்வழியாக ரோமாபுரிக்கு கொண்டு செல்லும் வேளை யிலே, அவர் சென்று கொண்டிருந்த கப்பல் பெரும் புயலில் அகப்ப ட்டது. அந்த வேளையிலே, கைதியாகிய பவுல், கவலைப் படாதிரு ங்கள், கப்பல் சேதப்படும், ஆனால் நீங்கள் ஒருவரும் மரிப்பதில்லை என்று கப்பல் மாலுமிக்கும் அதிகாரிகளுக்கும் கூறினார். அதன்படி ஒரு இராத்திரியிலே கப்பல் முற்றுமாக சேதமடைந்து, யாவரும் ஒரு தீவுக்கு சென்றடைந்தார்கள். அங்கே பவுல் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் போது விறகுகளிற்குள் இருந்த வி~ப் பாம்பு அவர் கையை கவ்விக் கொண்டது. அதைக் கண்ட அந்த ஊரார் இவன் நிச்சயமாக சபிக்கப்ப ட்டவன். கைதியாக வந்த இவன் வந்த கப்பலானது கடும் புயல் மோதி சேதமடைந்தது. சமுத்திரத்தில் தப்பி வந்தவனை சாபம் தொடர்ந்து வி~ப் பாம்பு கடித்து விட்டது. இப்போது இவன் விழுந்து மரித்துப் போவான் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஊழியாராகிய பவுல் பாம்பை கையிலிருந்து உதறிவிட்டு சுகமாக இருந்தார். அதை கண்ட ஊரார், இவன் மனிதனல்ல தெய்வம் என்றார்கள். ஆனால் அவ ரோ, ஊராரின் சபித்தலையோ அல்லது அவர்கள் புகழ்ச்சியையோ நா டாமல், ஆண்டவராகிய இயேசு தனக்குக் கொடுத்த திருப்பணியை செய்து முடிக்கும்படி முன்னானவைகளை நாடி அதையே பின் தொடர் ந்தார். அது போலவே நாமும் இயேசுவை பின்தொடர்ந்து செல்வோம்.

ஜெபம்:

அழைத்த தேவனே, மனிதர்களின் வார்த்தைகளை கேட்டு சோர் ந்து போகாதபடிக்கு கிறிஸ்து இயேசுவுக்குள் நீர் அழைத்த பரம அழை ப்பின் இலக்கை நோக்கித் தொடர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:21