புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 10, 2021)

பயப்படும் நாளிலே தேவனை நம்புங்கள்

சங்கீதம் 57:2

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.


இன்று சூரியன் உதிக்கவில்லை எனவே மப்பும் மந்தாரமுமாக இருக்கின்றது என்று ஒரு பையனானவன் தன் பாட்டனாரிடம் கூறினான். அதற்கு அவனுடைய பாட்டானர்: இல்லை தம்பி, ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது. தான் உதித்த இடத் திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது. இன்று மழை மேகங்கள் சூழ்ந்தி ருப்பதால், நாம் பார்க்க முடியாதபடி சூரியன் நம் கண்களுக்கு மறைவாக இருக்கின்றது எனக் கூறி னார். சில நாட்களிலே நம்முடைய வாழ்க்கையின் நிலைமையும் மழை மேகங்கள் சூழந்திருப்பதைப் போல மாறிவிடுகின்றது. பல தொல்லைக ளும் கஷ்டங்களும் மனதை நெருக் கின்ற வேளையிலே மனதிலே பயம் ஏற்பட்டுவிடுகின்றது. இந்த பயமானது இருளைப் போல நம்மை பற்றிக் கொள்ளும். அவ்வேளைகளிலே நாம் சூழ்நிலைகளை நோக்கிப் பார்ப்பதனால் விசுவாசத்திலிருந்து விலகி விடும் சந்தர்ப்பங்களுக்கு தள்ளப்படுகின்றோம். இருள் சூழ்ந்த உலகத் திலே, நம்மை சூழ உள்ள மனிதர்களின் மனக்கண்கள் குருடாக்கப்பட்டி ருக்கும் நாட்களிலே நாம் வாழ்ந்து வருகின்றோம். தேவனை அறியா தவர்கள் நம்மைப் பார்த்து “இவன் தன் தேவனை நம்பி இருந்தானே” என்று ஏளனம் செய்து கொள்வார்கள். அந்த வேளையிலே ஆண்டவரா கிய இயேசுவை நோக்கிப் பாருங்கள். விக்கினங்கள் கடந்துபோகு மட்டும் உன்னதமானவருடைய செட்டைகளின் நிழலிலே அமர்ந்திரு ங்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். எனவே மனந்த ளர்ந்து போய்விடாதிருங்கள். அழைத்த தேவன் உண்மையுள்ளவர். பயம் சூழ்ந்து கொள்ளும் வேளையிலே அவரை நம்புங்கள். என் ஆத்துமாவே உன் தேவனையே நோக்கிப் பார் என்று அறிக்கையிடுங்கள். என் ஆண்டவராகிய இயேசு எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று உங்கள் இருதயத்திலே விசுவாசியுங்கள். உங்கள் வாயினால் அறிக்கையிடுங்கள். அழுத்தும் சுமைகளை நோக்கிப் பார்க்காமல், அவைகளை ஊடுருவிச் செல்லும் உங்கள் விசுவாசக் கண்களினால் தேவனை நோக்கிப் பாருங்கள். அவராலே உங்களுக்கு ஜெயம் வரும்.

ஜெபம்:

கைவிடாத தேவனே, எந்த சூழ்நிலையிலும் நான் உம்மேல் கொண்டுள்ள விசுவாசத்தை விட்டுவிடாதபடிக்கு, உம்மையே பற்றிக் கொண்டிருக்க என்னைப் பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:7