புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 08, 2021)

மனவேதனையான நேரங்கள்

மத்தேயு 6:12

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.


ஐயா போதகரே, அநியாயங்களுக்கும் ஒரு அளவு உண்டு. இந்த மனி தன் என் வாழ்விலே செய்திருக்கும் அநியாயங்களைப் பாருங்கள். ஆண் டவர் இவையெல்வற்றiயும் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கின் றார் என்று ஒரு மனிதன் தன் போதகரிடம் கூறிக் கொண்டான். மகனே, உன் மனவேதனை ஓரளவிற்கு எனக்குப் புரிகின்றது. உனக்கு அநியாயம் செய்த மனிதனுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்று அவனிடம் கேட்டார். அவனும் அவன் குடும்பமும் என் நிலையை உணரும்படிக்கு என கேற்பட்ட நோவுகளும் மனவேதனை களும்;, பின்னடைவுகளும் அவனுக் கும் அவன் குடும்பத்திற்கும் ஏற்ப்பட வேண்டும். அதை நான் காண வேண் டும் என்று தன் கோபத்திலே அவர் களை சபித்துக் கொண்டான். கொஞ் சம் இதிலே உட்கார்ந்திரு. நான் சில நிமிடங்களிலே வந்துவிடு வேன் என்று கூறிச் சென்ற போதகர், ஒரு கடித உறையை அவனுக்கு கொடு த்து, நீ இந்தக் கடித உறையை இப்போது திறக்கக் கூடாது நாளை காலையிலே நீ திறந்து இந்த ஜெபத்தை உன் உள்ளத்திலிருந்து தேவனுக்கு தெரியப்படுத்து. தினமும் அப்படியே ஜெபித்துக் கொள் என்று கூறி அவனை அனுப்பிவிட்டார். மறுநாள் அதிகாலையிலே, அந்த மனிதன் ஜெபிக்கும் படிக்கு அந்த கடித உறையை திறந்து பார்த்தான். அவன் ஆச்சரியத்திற்கு அங்கே ஒரு சிறிய ஜெபம் எழுதப்பட்டிருந்தது. “இரக்கமுள்ள தேவனே, நான் மற்றவர்களுடைய குற்றங்களை எப்படி மன்னிக்கின்றேனோ அப்படியே என் குற்றங்களையும் எனக்கு மன்னித் தருளும். எனக்காக சிலுவையில் பலியான இயேசுவின் நாமத்தில்; ஜெபிக்கின்றேன். ஆமேன்.” என்று எழுதப்பட்டிருந்தது. போதகர் எழு திய அந்த வார்த்தைகள் அவன் மனதிலே அவ்வப்போது ஒலித்துக் கொண்டிருந்தது. சில நாட்களுக்கு பின் அவன் புத்தி தெளிந்தது. தன் மதியீனத்தை அவன் உணர்ந்து கொண்டான். கோபாக்கினையின் பிள் ளையாக நான் இருந்த வேளையிலே என் குற்றங்களை தயவாய் மன் னித்து என்னை தம்முடைய ராஜ்யத்தின் பிள்ளையாக மாற்றிய தேவனு டைய மகா பெரிதான அன்பை நினைத்துப் பார்த்தான். “பரலோக தந் தையே, பெலவீனமான என்னை வழிநடத்திச் செல்லும். பாடுகளின் மத் தியிலும் தன்னை துன்பப் படுத்துகின்றவர்களை மன்னிக்கும்படி வேண் டிக் கொண்ட உம்முடைய திருக்குமாரராகிய இயேசுவைப் போல மாற எனக்குக் கிருபை செய்யும்” என்று தேவனை வேண்டிக் கொண்டான்.

ஜெபம்:

பெலவீன வேளைகளிலே பெலன் தரும் தேவனே, துன்பத்தின் நடுவில் நடக்கும் போதும் உமக்கு விரோதமான வார்த்தைகளை நான் அறிக்கையிடாதபடிக்கு என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:44