புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 06, 2021)

ஆசீர்வதிக்கப்படும் சந்ததி

சங்கீதம் 128:4

இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.


என் மகன் படிப்பில்லாமல் வேலையில்லாமல் வீணான நண்பர்களுடன் சேர்ந்து தன் காலத்தை விரயப்படுத்துகின்றான். அவனை உங்களோடு சேர்த்து, எப்படியாவது நல்லவனாக மாற்றி விடுங்கள், அவன் எம் மதத்திலிருந்தாலும் அவன் நன்றாக இருக்கட்டும் என்று ஒரு பெற்றோர் தங்களுடைய மகனைக் குறித்து, ஒரு போதகரிடம் முறையிட்டார்கள். அம்மா, ஐயா உங்கள் மகன் ஆலய த்திற்கு வரட்டும் அவன் நலனிற்காக முடிந்த உதவிகளை செய்கின்றேன் ஆனால் உங்களுடைய காரியம் என்ன என்று அந்த போதகர் கேட்டார். அந் தப் பெற்றோர் மறுமொழியாக: இருக் கின்ற இடத்திலே நாங்கள் நன்றாகத் தான் இருக்கின்றோம் எங்கள் மகனிற் குத்தான் ஒருவழியை பாருங்கள் என்று வேண்டிக் கொண்டார்கள். போதகர் அவர்களை நோக்கி: கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாச த்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிரு க்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே நீங்கள் உங்கள் வழிகளை ஆண்டவராகிய இயேசுவினிடம் ஒப்புக் கொடுத்து, அவருடைய போத னையில் நடக்கும் போது, உங்கள் குடும்பம் முழுவதும் ஆசீர்வதிக்க ப்படும் என்று கூறினார். ஆம் அருமையான சகோதர சகோதரிகளே, “எங்களுக்கல்ல எங்கள் பிள்ளைகள் தான்” என்று பலர் கூறிக்கொள்வதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். அதாவது எங்கள் வழிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாங்கள் போகும் பாதையில் மாற்றம் இல்லை ஆனால் எங்கள் பிள்ளைகள் எப்படியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று கூறிக் கொள்வார்கள். ஆனால் ஒரு மனிதன் தன் வழிகளை ஆராய்ந்து பார்த்து, கர்த்தராகிய இயேசுவிடம் திரும்பும் போது அவன் நித்திய வாழ்வை பெற்றுக் கொள்கின்றான். அது மட்டுமல்ல, அவன் சந்ததி கர்த்தரால் வரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளும். இன்று அந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு உங்கள் வாழ்க் கையை முழுமையாக கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுங்கள் அவர் உங் களை ஆதரித்து நடத்திச் செல்வார்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் பிதாவே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத் தில் நடப்பதன் மேன்மையை உணர்ந்து அதன்படி என் வாழ்க்கையை நான் அமைத்துக் கொள்ள என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5