புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 05, 2021)

நீ நடக்கவேண்டிய வழி

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட் டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.


ஒரு ஊரிலே துன்மார்க்கமாக வாழ்ந்து வந்த மனிதனொருவன், தான் வாழும் வீட்டிற்கு அருகே கூடியிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து அவர்களிடமிருந்த கொஞ்சப் பணத்தை பலாத்காரமாக எடுத்து, அவர் களை அடித்து அந்த இடத்தைவிட்டு துரத்திவிட்டான். அந்த வாலிபர்க ளில் ஒருவன் தன் தந்தைக்கு போலிஸ் இலாகாவில் செல்வாக்குகள் உண்டு என அறிந்திருந்தான். அவன் தன் தந்தையிடம் சென்று, தனக்கும் தன் நண்பனுக்கும் நடந்த விபரீதத்தை விளக்கிக் கூறினான். தங்களை அடித்த அந்த மனிதனுக்கு எதிராக கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தன் தந்தையிடம் கெஞ்சி வேண்டிக் கொண் டான். நீதிமானாகிய அவனது தந்தை யோ, அவனை அழைத்து, மகனே இங்கே உட்காரு, உனக்கு ஏற்பட்ட இந்த நிலையை பார்க்கும் போது என க்கு மனவேதனையாக இருக்கின்றது; நான் உன்னை எவ்வளவாக நேசிக்கின்றேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். உன்னையும் உன் நண்பனையும் அடித்த அந்த மனிதனுக் கெதிராக நடவடிக்கை எடுப்பது இலகுவான காரியம் ஆனால் இரவு நேரத்திலே, அந்த மனிதன் வாழும் இடத்திலே உனக்கும் உன் நண்பனு க்கும் என்ன வேலை இருந்தது எனக் கேட்டார். நீ யார் என்பதையும், நீ நிற்க வேண்டிய இடம் எது என்பதையும், நீ நடக்க வேண்டிய பாதை இன்னதென்பதையும், நீ உட்கார வேண்டிய இடம் எது என்பதையும் நீ அறிந்திருக்கின்றாய்;; எனவே இனி பொல்லாப்பு உன்னை அணுகாத படிக்கு உன் வாழ்க்கையை காத்துக்கொள் என்று பதில் கூறினார். பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர் நமக்கு மறைவிடமாயிருக்கி ன்றார். நம்மை இக்கட்டுக்கு விலக்கிக் காக்கின்றார். எனவே நாம் நிற்க வேண்டிய இடத்தைவிட்டு நிற்கக்கூடாத இடத்திற்கு தேவ வழிநடத்து தலை மீறிச் செல்பவர்களாக இருந்தால் அங்கே மனவேதனைகளும் துன்பமும் உண்டாகும். துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாம லும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனு~ன் பாக்கியவான் என்று பரிசுத்த வேதாகமம் அறிவுரை கூறுகின்றது. எனவே தேவ ஆலோசனையை பின்பற்றி வாழக்கடவோமாக.

ஜெபம்:

வழிநடத்தும் நல்ல தேவனே, உம்முடைய வார்த்தை கூறும் அறிவுரையை விட்டுவிடாதபடிக்கு அவைகளை என் இருதயத்திலே காத் துக் கொள்ளும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:72