புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 04, 2021)

என் தேவை என்ன?

யோவான் 14:6

இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


ஒரு தேசத்தை அரசாண்டு வந்த ராஜா தன் மந்திரியொருவனை அழைத்து, தேசத்தை நோக்கி வரவிருக்கும் கொடிய பேரழிவையும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற வழிமுறையையும் குடிமக்களுக்கு கூறும்படியாக அவனை ஊரூராக அனுப்பி வைத்தான். அந்த மந்திரி ஒவ்வொரு ஊருக்கும் சென்ற போது, பலவிதமான ஜனங்கள் வெவ்வேறான நோக்கத்துடன் அங்கே கூடி வந்திருந்தார்கள். ஒரு சிலர், ராஜா வின் பணிப்புரையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கூடி வந்தார்கள். வேறு சிலர், தேசத் தின் ஆளுகையைக் குறித்த தங்கள் அதிருப்தியை மந்திரியிடம் தெரிவிக்க வேண்டும் என்று கோபத்துன் கூடி வந் திருந்தார்கள். இன்னும் சிலர், தாங்கள் ஏதாவது இலாபம் அடைய முடியுமா என்ற எண்ணதுடன் கூடி வந்திருந்தார்கள். வேறு ஒரு சாரார், இங்கே ஜனங்கள் அதிகமாக கூடிவந்திருக்கின்றார்களே, நாங்கள் ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துவிடலாம் என்று கூடி வந்திருந்தார்கள். இப்படியாக இந்த உலகிலே வாழும் மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை உண்டு. அவற்றுள் சில அவசியமானதும் வேறு சில அநாவசியமானதுமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவையை அவர்கள் அதிமாக நோக்கிப் பார்ப்பதினால் தங்களை நோக்கி வரும் பெரிதான பயங்கரத்தையும், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண் டிய அவசியத்தையும், காலம் குறுகியதாக இருப்பதையும் உணராத வர்களாக வாழ்ந்துவிடுகின்றார்கள். மீட்பராகிய இயேசு, மனித குலமா னது நித்திய ஆக்கினைக்குள்ளாகாதபடிக்கு, யாவரையும் மீட்கும்படிக்கு இந்த உலகிற்கு வந்தார். ஆனால் அவரை பின்பற்றிய ஜனங்களில் அநேகர்; நித்திய மரணம், நியாயத்தீர்ப்பு, நித்திய ஆக்கினை என்பதன் கருத்தை உணர முடியாமல் போனார்கள். பொருளாசையாகிய இந்த உலகத்தின் தேவைகள் மட்டுமே அவர்கள் சிந்தை முழுவதையும் ஆட் கொண்டிருந்தது. பிரியமானவர்களே, இந்த உலகத்திலே உயிர்வாழ்வதற்கு அவசியமானவைகள் என்ன என்பதை பரம பிதா அறிந்திருக்கின்றார். அதை அவர் உங்களுக்குத் தருவார். அதற்;காக மாத்திரமல்ல மேலான, நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ளும்படிக்கும் மீட்பராகிய இயேசுவை நாடுங்கள். காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, வரவிருக்கும் கோபாக்கினைக்கு தப்பித்துக் கொள்ளும்படிக்கு, நான் காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33