தியானம் (மாசி 01, 2021)
அலையலையாய் வரும் ஆசீர்வாதங்கள்
ஏசாயா 59:19
வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
வாழ்க்கையில்; இன்னல்களும் பிரச்சனைகளும் வரும்போது அவை ஒன்றன்பின் ஒன்றாக, துரிதமாகவும் தொகையாகவும் வருகின்றது என்று பொருட்படும்படி “மழை பெய்யும் போது பெரும்மாரியாக கொட்டுகிறது” என்று ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. சில மனிதர்கள் தங்கள் காலம் நன்றாக இல்லை என்று படைத்தவரை நோக்கிப் பார்க்காமல், உன்னதமானவருடைய ஆலோசனைகளைத் தள்ளிவிட்டு, படைப்புக்களிடமிருந்து தங்கள் அதிஷ்டங்களை அறிய விரும்புகின்றார்கள். மரணத்தின் கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது. பேரழிவுகள் என்னை மூழ்கடிக்கும்ப டியாய் அலையலையாய் பெருக்கெடுத்து என்மேல் பாய்ந்தது. பாதாளத்தின் கட்டுக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டது. மரணத்தின் கண்ணிகள் என்மேல் விழுந்தது என தாவீது ராஜா தன் வாழ்க்கையில் தனக்கேற்பட்ட துன்பங்களை விபரித்துக் கூறியிருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில், இக்கட்டும் நெருக்கமும் என் வாழ்க்கையை சூழ்ந்து கொண்டபோது நான் படைப்புக்களை நோக்கிப் பார்க்காமல், எனக்கு உண்டான நெருக்கத்திலே என் தேவனாகிய கர்த்தரை நோக் கிக் கூப்பிட்டு, என் தேவனையே நோக்கி ஜெபம் செய்தேன். அவர் என் சத்தத்தை கேட்டு என்னை சகல இக்கட்டுகளிலும் நெருக்கங்களிலி மிருந்து மீட்டுக் கொண்டார் என்று கூறியிருக்கின்றார். மனிதர்கள் தங் கள் வாழ்க்கையில் துர்ச்செய்திகளை கேட்கும் போது கலங்கிப் போய் விடுகின்றார்கள். ஏனெனில் பேரழிவை உண்டாக்கும் வெள்ளம் போல சத்துருவானவன் மனிதர்களுடைய வாழ்வை அழித்துப் போடும்படி வருவான். இந்த உலகமும் அதின் முறைமைகளும் சத்துருவானவனு டைய அதிகாரத்திற்குட்பட்டிருக்கின்றது. எனவே, இந்த உலக முறை மையின்படி நம் வாழ்க்கையின் அதிர்ஷ்டங்களை, படைப்புக்கள் வழியாக அறிய முயலும் போது, நாம் நம்மை கொல்லவும் அழிக்கவும் வருகின்ற சத்துருவானவனிடம் நம் வாழ்க்கையை ஒப்புக் கொடுக்கி ன்றவர்களாக மாறிவிடுகின்றோம். மாறாக நாங்கள் இந்த உலகத்தை ஜெயம் கொண்ட நம் ஆண்டவராகிய இயேசுவை நோக்கி பார்க்க வேண்டும். அவருடைய நாமத்திலே நாம் பெற்றிருக்கும் தேவ ஆவியா னவர்தாமே பேரழிவைப் போல நம்மேல் வரும் வெள்ளப் பெருக்கை, அலையலையாய் வரும் ஆசீர்வாதங்களாக மாற்றிவிடுவார்.
ஜெபம்:
விடுதலை தருகின்ற தேவனே, வெள்ளம் போல வரும் பேரழிவு களைக் கண்டு மருளாதபடிக்கு, எங்கைள வெற்றி சிறக்கப்பண்ணும் உம்மை நோக்கிப் பார்க்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஆதியாகமம் 50:20