புதிய நாளுக்குள்..

தியானம் (தை 31, 2021)

சகாயம் செய்யும் தேவன்

சங்கீதம் 10:14

நீர் பதிலளிப்பீர் ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான் திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.


எலியா என்னும் தேவ ஊழியரின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தது. அந்த நாட்களிலே ஆகாரத்திற்கு மட்டும் பஞ்சமல்ல, தேவனுக்கு பயந்து அவருடைய வார்த்தையின்படி வாழ்பவர்களைக்கூட காணமுடியாதபடி பஞ்சமுண்டாயிருந்தது. கர்த்தர் எலியாவை நோக்கி: நீ எழுந்து சாறிபாத்து என்னும் ஊருக்கு போ என்று கட்டளை யிட்டார். அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்திலும், அத்தோடு கொஞ் சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்மு டைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக் கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்ப டாதே. நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து. ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா. பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை. கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். கர் த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை. கலசத்தில் எண்ணெய் குறை ந்துபோகவும் இல்லை. பிரியமானவர்களே, இந்த உலகத்தின் சூழ்நிலை கள் எப்படியாகவும் இருக்கலாம். சிறுமைப்பட்டவர்கள்மேல் கண்ணோ க்கமாயுள்ள தேவன், தம்மை நோக்கி பார்க்கின்றவர்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்திருக்கின்றார். அதை சந்திப்பதற்குரிய வழியை யும் ஆயத்தப்படுத்தியிருக்கின்றார். அவர் பதிலளிக்கின்ற தேவன். திடமனதோடு காத்திருங்கள்.

ஜெபம்:

என் அலைச்சல்களை அறிந்த தேவரீரே, என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது. நான் கூப்பிடும் நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 56:8