புதிய நாளுக்குள்..

தியானம் (தை 29, 2021)

வாழ்வின் மேன்மை என்ன?

யாத்திராகமம் 33:16

எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா?


இராஜாக்கள் அரசாண்ட காலத்திலே அவர்கள் இருந்த கோட்டைகளும் அரண்மனைகளும், அவர்கள் உபயோகித்த பொருட்களும், இன்று காட் சிப் பொருட்களாக நூதன சாலைகளிலே வைக்கப்பட்டிருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் இன்று தேசிய பாரம்பரிய சொத்துக்களாகவும் பேணிப் பாதுகாத்து வரப்படுகின்றது. இந்த உலகிலே இன்று பல நவீன கட் டிடங்களை நாங்கள் காண்கின்றோம். நவீன இடாம்பீகரமான மாளிகைகளை தாங்கள் குடியிருப்பதற்கென்றும் கட் டிக் கொள்கின்றார்கள். அதே வேளை யிலே, மறுபக்கத்தில் ஏழை மக்கள் எளி மையான குடிசைகளிலே வாழ்ந்து வரு கின்றார்கள். மாளிகைகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் தங்கள் வீட்டை யும் அதிலுள்ள பொருட்களையும் குறித்து மேன்மை பாராட்டுகின்றார்கள். ஒரு குடும்பத்தின் மேன்மை என்ன? வீடும் அதிலுள்ள பொருட்களும் குடும்பத்தை ஐக்கியப்படுத்துமோ? அவைகளினாலே அங்கே நிம்மதி உண்டாகுமோ? இன்று வானுயர்ந்த ஆலய கட்டிடங்களை காண்கின்றோம். அவற்றுள் சில நாட்டின் பாரம் பரிய சொத்துக்களாகவும், உல்லாச பயணிகளை கவர்ந்து கொள்ளும் இடமாகவும் இருந்து வருகின்றது. ஒரு ஆலயத்தின் மேன்மை என்ன? அதன் வடிவமைப்பு அதன் மேன்மையாகுமோ? திரளாக ஜனங்கள் அங்கு செல்வதினால் அது ஆலயமாகுமோ? அங்கே ஜனங்கள் கூடி வரும் போது அவர்கள் மத்தியில் தேவனுடைய பிரசன்னம் அங்கு இல்லையென்றால் அந்த இடம் எவ்வளவு அழகாக இருந்தும் அதன் மேன்மை அற்பமே. எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், நாங்கள் கூடிவரும் ஆலயத்திலும் தேவன் எங்களோடிருப்பதே மேன்மையானது. காரியம் அப்படியாக இருந்தால் நாங்கள் எதைக் குறித்து மேன்மை பாரட்ட முடியும்? இன்று ஜனங்கள் ஆலய கட்டிடங்களையும், அதன் அழ கையும், அங்கு செல்லும் மனிதர்களின் தொகையையும் ஆலயத்தின் வளர்ச்சி என்று கணக்கிடுகின்றார்கள். தேவ ஊழியராகிய மோசேயோடு இலட்சக்கணக்கான ஜனங்கள் இருந்தார்கள். அவர் தேவனை நோக்கி: உம்முடைய பிரசன்னம் எங்களோடுகூட வராதிருந்தால் நாங்கள் பிரயா ணப்படுவதில் பிரயோஜனம் ஏதுமில்லை என்று கூறினார். ஆம், கர்த்தர் நம்மோடு இருப்பதே நமக்கு மேன்மைனயானது.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, நீர் இல்லாத வாழ்க்கை கருத்தற்றதும் பாலைவனம் போன்றதுமாயிருக்கும். உம்முடைய பிரசன்னம் எங்களோடே இருப்பதே எங்கள் மேன்மை என்பதை உணர்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:4-5