புதிய நாளுக்குள்..

தியானம் (தை 28, 2021)

நோவுகள் எதினால் ஏற்பட்டது

சங்கீதம் 19:11

அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.


ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் குழப்பங்கள் ஏற்படு வதுண்டு. கடந்த ஆண்டிலே உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் எங்கே ஆரம்பித்தது? அவைகளை என் மனம் போன போக்கில் தீர்த்துக் கொண்டேனா அல்லது வேதவாக்கியங்களின் படி மேற்கொ ண்டேனா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சில வேளைகளிலே, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைக ளுக்கு முடிவு காண வேண்டும் என்று மாம்ச இச்சைகள் எங்களை மேற் கொள்ள இடங் கொடுத்துவிடுகின் றோம். அதாவது பிரச்சனைகள் ஏற்படும் போது, எங்கள் கோபம், வைராக்கியம், சுயநீதி போன்றவை எங்கள் சிந்தைகளை மேற்கொள்ள இடங்கொடுத்து அதன்படி செயற்படுகின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே மனிதர்கள், தங்கள் சுயநீதியை நியாயப்ப டுத்த ஏதாவது வேத வாக்கியங்கள் இருக்கின்றதா என்று தேடுகின்றார்கள். தங்களுக்கு சார்பாக யாராவது உடன்படுவார்களா என்று கலந் தாலோசனை செய்கின்றார்கள். முடிவிலே, தங்கள் மாம்ச சிந்தைக்கு இடங் கொடுத்து தங்கள் மனதிலே ஒரு தற்காலிகமான திருப்தியை அடைந்து கொள்கின்றார்கள். அவை பிசாசானவன் இருதயத்தில் விதை த்த வித்துக்கள் என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். ஏன் மனிதர்கள் இப்படியான சோதனைகளுக்கு திரும்பத் திரும்ப இலகுவாக இடங் கொடு க்கின்றார்கள்? இப்படிப்பட்ட பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்னதாகவே, இவர்கள் பல நாட்களாக வேத வாசிப்பையும் அதன் தியானத்தையும் விட்டுவிட்டிருப்பார்கள். தினமும் ஜெபிப்பதை பல நாட்களுக்கு முன்னதாகவே விட்டிருப்பார்கள். பிரியமானவர்களே, தேவனுடைய வசனமே நம் கால்களுக்குத் தீபமும், நாம்; செல்லும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கின்றது. இந்தக் கிழமை நம்முடைய வீட்டிற்கு வெளிச்சம் தேவையில்லை, நாங்கள் இருளிலே நடமாடுவோம் என்று ஒருவர் உங்களிடம் கூறினால் அவரைக் குறித்து என்ன சொல்லுவீர்கள்? பிரியமானவர்களே, சத்திய வேதமே நம் ஆன்மீக விளக்கு. எனவே, உணர்வுகளுக்கு இடங் கொடுக்காமல், அதை தினமும் படியுங்கள், தியானியுங்கள், கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

ஜெபம்:

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள் என்று கூறிய தேவனே, மன வேதனையான நேரங்களிலே என் உணர்வுகளின்படி செயற்படாமல் உம்முடைய வேதத்தைப் பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:17