புதிய நாளுக்குள்..

தியானம் (தை 26, 2021)

எங்களுடைய ஐக்கியம்

1 யோவான் 1:6

நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக் கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிற வர்களாயிருப்போம்.


ஒரு வாலிபன், தன் வாலிப நாட்களிலே தம் நேரத்தை வீணடிக்கும் நண் பர்களோடு சேர்ந்து சுற்றித்திரிந்தான். அதைக் கண்ட அவன் தகப்பனா னவர்: மகனே, உன் வழியை கர்த்தருடைய வார்த்தையின்படி காத்துக் கொள். தேவ வார்த்தையைவிட்டு தவறிப்போனால் நீ தவிக்க நேரிடும் என்று கூறினார். வாலிபன்: “அப்பா, இயேசு பாவிகளோடு உணவு ண்டார், எனவே தவறி நடக்கின்றவர்க ளுடன் நான் சேர்ந்து, நானும் திரிகி ன்றேன் என்றான்” தகப்பனானவர்: மக னே, மீட்பராகிய இயேசு, பாவிகளை தேடிச் சென்றது உண்மை ஆனால் அன் றைய நாளுடன் அவர்கள் வாழ்விலே மீட்பு உண்டானது. அவர்கள் பழைய வாழ்க்கையைவிட்டு புதிய வாழ்க்கைக்கு திரும்பினார்கள். அவர், அவர்கள்; யாவரையும் மன்னித்து “இனி பாவம் செய்யாதே” என்று எச்சரித்தார். பாவ மறியாத பரமன் இயேசு குற்றவாளிகள் மத்தியிலே சிலுவையில் தொங்கினார். அவரைச் சூழ பரியாசக்கா ரர்கள் இருந்தார்கள். ஆனால் அவரோ எவரையுமோ பரியாசம் செய்யவி ல்லை. அவர் பாவிகளின் பாவங்களில் பங்கேற்கவுமில்லை. அதாவது அவர்களோடு சேர்ந்து அவர்களைப் போல பாவம் செய்யவில்லை. நற் செய்தியை அவர்களுக்கு கூறினார். அவர்களில்; அவரை ஏற்றுக் கொண்டவர்கள் அவருக்குப் பின்சென்றார்கள். ஆனால் பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்ப விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் பாவத்திற்கு பின்சென்றார்கள். ஆனால் நீயோ, தங்கள் நேரத்தை விரயமாக்கி, பாவ வழிகளில் செல்லும் நண்பர்களோடு, போக்கும் வரத்துமாக இருந்து, அவர்களைப் போல பாவம் செய்கின்றாயே என்று பதில் கூறினார். பிரி யமானவர்களே, பாவிகள், பரியாசக்காரர், துன்மார்க்கர் யாவரும் மனந் திரும்ப வேண்டும் என்ற வாஞ்சை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலே அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும், அவர்களது மனக்குருட்டாட்டம் நீங்கும்படி தின மும் ஜெபிக்க வேண்டும். ஆனால் அவர்கள் மனந்திரும்பும்படி நாங்கள் அவர்களோடு சேர்ந்து அவர்களின் தவறான வழிகளிலே பங்கேற்போ மானால் நாங்கள் மறுபடியும் இருளில் நடக்கின்றவர்களாக இருப்போம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும், குமாரனாகிய இயேசுவோடும் உண்டு. எனவே உங்கள் பரிசுத்த வாழ்வை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று கூறிய தேவனே, எந்த ஒரு காரணத்திற்காகவும் உம்முடைய கற்பனைக ளைவிட்டு விலகாதபடிக்கு என்னை காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6