புதிய நாளுக்குள்..

தியானம் (தை 22, 2021)

கொடுப்பதன் மேன்மை

மத்தேயு 10:42

இயேசு சொன்னார்: சீஷன் என்னும் நாமத்தினிமித் தம் இந்தச் சிறியரில் ஒரு வனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடி க்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையா மற் போகான் என்று மெ ய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


ஐயா எத்தனை வருடங்களாக ஊழியங்களை உங்கள் பொருளால் தாங்கி வருகின்றீர்களே, உங்களுடைய மனசு பெரியது என்று ஒரு பெரியவரைப் பார்த்து ஒரு மனிதன் கூறினான். அதற்கு அந்த பெரியவர்: தம்பி, நான் ஊழியங்களை தாங்கி நடத்தவில்லை, தேவனே என்னைத் தாங்கி நடத்துகின்றார். என்னிடத்தில் தேவன் தந்திருப்பதை நான் என் விருப்பப்படி விரயம் செய்யாமல், ஞா னமாக செலவு செய்யும்படிக்கு தேவன் என்னை வழிநடத்தி வருகின்றார். நான் அவர் கரத்திலிருக்கும் அப்பிரயோஜனமான கருவி என்று அவர் பதில் கூறினார். ஆண்டவர் இயேசு இந்த உலகிலே இருந்த நாட்களிலே, ஏரோது ராஜா வின் காரியக் காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள். (லூக்கா 8:1-3). இன்று மூன்றாம் உலக நாடுகளிலே, அநேக ஊழி யர்கள், வறுமைகோட்டிற்குள் வாழும் மக்கள் மத்தியிலே ஊழியம் செய்து வருகின்றார்கள். அவ்விடங்களிலே தங்கள் அன்றாட தேவைகளை சந்திப்பதற்கு ஊழியர்களும், பல விசுவாசிகளும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். தேவனுடைய ராஜ்யதிற்கு பங்காளிகளாக அழைக்கப்பட்ட நாங்கள், இந்த விஷயத்திலே தா ராள மனதுடையவர்களாகவும், பரந்த நோக்குடையவர்களாகவும் இரு க்க வேண்டும். தேவனுடைய ராஜ்யத்திலே, பிதாவினுடைய சித்தம் செய்கின்றவர்களே இறுதியில் பங்கடைவார்கள். எனவே, அவருடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்திற்காக மூன்றாம் உலக நாடுகளிலே பல சிர மங்கள் மத்தியிலே பாடுபடும் ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஏற்பட்டால், அதாவது, நீங்கள் இன்னுமொருவருக்கு உதவி செய்யக்கூடிய நிலையிலே தேவன் உங்களை வைத்திருந்தால், தேவன் முன்னிலை யிலே உங்களை தாழ்த்துங்கள். தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுவதற்கு ஒத்தாசையாக இருக்கும்படிக்கு தேவன் எனக்கு பொருளையும், மனதையும் தந்திருக்கின்றார் என்பதற்காக அவரை மகிமைப்படுத்துங்கள்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, நான் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, மனப்பூர்வமாய் உம்முடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்திற்காக கொடுப்பதன் மேன்மையை உணரச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 20:35