புதிய நாளுக்குள்..

தியானம் (தை 20, 2021)

எப்படி மன்னிப்பது?

மத்தேயு 5:44

இயேசு: உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகி றவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.


வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருப்பது? சமையலறையை எப்படி சுத் தம் செய்வது? குளியலறையிலிருக்கும் அழுக்கை எப்படி நீக்கிவிடு வது? என்பதைப்பற்றிய அநேக விளம்பரங்களை நாங்கள் பார்க்கின் றோம். சிலவேளைகளிலே, சுத்தமாய் வைத்திருக்க விரும்புகின்றவர் கள் எங்கே எப்படி ஆரம்பிப்பது என்ப தைக் குறித்து தெளிவில்லாதிருக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. அது போலவே எங்கள் உள்ளான மனிதனில் குடி கொண்டிருக்கும் மாம்சத்தின் கிரியை களாகிய பகை, வன்மம், கசப்பு, பிரிவினை போன்றவைகள் பெரும்பாலானோரின் வாழ்வை மேற்கொண்டிரு க்கின்றது. அதிலிருந்து விடுதலைய டைய வேண்டும் என்பதின் அவசியத்தை அறிந்திருந்தாலும், நாட்பட்ட அழுக்குகளை எமது உள்ளத்திலி ருந்து அகற்றிவிடும்படி எங்கே எப்படி ஆரம்பிப்பதென்பதை அறியாமலிருக்கின்றார்கள். முதலாவதாக நாங்கள் விசுவசித்து அறிக்கையிட வேண்டிய உண்மையாவது: இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவ ங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநி யாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதி யும் உள்ளவராயிருக்கிறார். இரண்டாவதாக: எங்கள் உள்ளத்திலிருக்கும் கசப்பு யாரால் உண்டானது? எந்த மனிதனுடைய பெயரைகூட உச்சரிப்பதற்கு நாங்கள் விரும்பமில்லாதவர்களாக இருக்கின்றோம் என்பதை அறிந்து, அவைகளை உங்கள் ஜெப குறிப்பு புத்தகத்திலே பட்டியல் படுத்துங்கள். உங்கள் அறைவீட்டுக்குள் முழங்கால்படியிட்டு, “என் பிதாவாகியே தேவனே, என்மேல் அன்பு கூர்ந்து எனக்காக பலியாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவர்களை ஆசீர்வதிக்கின்றேன்” என்று அவர்களின் பெயர்களை கூறி ஜெபியுங்கள். முதல் தடவை அப் படி செய்யும்போது அது கருத்தற்றது போல இருக்கும். இப்படி தினமும் செய்யுங்கள் சில நாட்களுக்குள், உங்களை அறியாமல், உங்களி லிருந்த பகை உணர்வு அகன்று போவதையும், மன்னிக்க வேண்டும் என்னும் திவ்விய சுபாவம் உங்களுக்குள் பெருகுவதையும் அறிந்து கொள்வீர்கள். இது எனக்கு கடினமாக செயல் என்று எண்ணாமல் இன்றே ஆரம்பியுங்கள். உங்களுக்குள் வாசம் செய்யும் தூய ஆவியா வனர் உங்களுக்கு உதவி செய்வார்.

ஜெபம்:

இரக்கம் நிறைந்த தேவனே, என் உள்ளத்தில் பகையை வளர்க்காமல், அவற்றை உம் சமுகத்தில் அறிக்கையிட்டு, என்னை துன்பப்படுத் துகின்றவர்களை நான் ஆசீர்வதிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:14-15