புதிய நாளுக்குள்..

தியானம் (தை 19, 2021)

கனிகொடுக்கும் வாழ்க்கை வாழுவோம்

யோவான் 15:4

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடி யி ல் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொ டுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.


ஒரு கிரமாத்திலே இயங்கி வந்த முதியோர் இல்லம் ஒன்றிற்கு, அரசாங்கத்தின் அனுசரணையுடன், அருகிலிருந்த பொலிஸ் காவல் பிரிவின் நிலையத்திலிருந்து மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. சில கிழமைகளுக்கு பின், ஒரு நாள் இராத்திரியிலே, அந்த முதியோர் இல்லத்தில் வெளிச்சமில்லாமல் இருளாக இருந்தது. பொலிஸ் காவல் பிரிவில் மின்சாரம் இல்லை அதனால் இங்கே இருளாக இருக்கின்றது என அந்த முதியோர் இல்லத்தின் நிர்வாகி எண்ணினார். ஆனால் அவர் வெளியே சென்று பார்த்த போது பொலிஸ் நிலையத்தில் மின்சாரம் இருப்பதை கண்டு கொண்டார். மறு நாள் காலை யிலே, பொலிஸ் நிலையத்தோடு இரு க்கும் மின்சார இணைப்பு அறுந்திரு ப்பதை கண்டு கொண்டார்கள். இந்த சம்பவத்தோடு எங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்போம். “நானே திராட் சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்தி ருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங் களால் ஒன்றும் செய்யக்கூடாது.” என ஆண்டவர் இயேசு கூறியிருக்கி ன்றார். நாங்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டு அவரில் நிலைத்திருந் தால், அவருடைய வாழ்விலுள்ள திவ்விய சுபாவங்கள் எங்களிலும் வெளிப்பட வேண்டும். அப்படியாக எங்கள் வாழ்வில் திவ்விய சுபாவ ங்கள் வெளிப்படாமல், பகை, வன்மம், கசப்பு, பிரிவினைகள் வெளி ப்பட்டால் நாங்கள் எங்கள் இணைப்பை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு வேளை வெளியே இருப்பவர்களுக்கு எங்கள் வாழ்க்கை பரிசுத்தம் போல தெரியலாம். ஆனால் தங்கள் இருதயத்தில் என்ன இருக்கின்றது என அவரவர்களே அறிந்திருக்கின்றார்கள். இயேசுவும் அதை அறிவார். இயேசு மெய்யான ஒளியாக இருக்கின்றார். நாங்கள் அவரில் நிலை த்திருந்தால் அந்த ஒளி எங்கள் வாழ்க்கையின் செய்கையினால் வெளி ப்பட வேண்டும். ஒளிக்குப் பதிலாக இருள் எங்கள் வாழ்க்கையில் இரு க்குமென்றால் எங்கள் இணைப்புக் குறித்து நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தம்மிடத்தில் வருகின்ற எவரையுமே புறம்பே தள்ளாத தேவனிடத்தில் திரும்புங்கள். அவர் உங்களை வழிநடத்துவார்

ஜெபம்:

உன்னதமான தேவனே, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவிலே இருந்து திவ்விய சுபாவங்கள் எப்போதும் என்னில் வெளிப்படும்படிக்கு என்னை நாளுக்கு நாள் தூய்மைப்படுத்தி வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:43-44