புதிய நாளுக்குள்..

தியானம் (தை 18, 2021)

இயேசு கிறிஸ்துவின் அன்பு

யோவான் 15:9

இயேசு சொன்னார்: என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.


ஆறாம் வகுப்பு படிக்கும் போது, எனக்கு கணிதம் படிப்பித்த ஆசிரியர் என்னை அதிகமாக தண்டித்ததால் நான் கணித பாடத்தையே வெறுத்து விட்டேன் என்று ஒரு மனிதன் கூறிக் கொண்டான். அந்த மனிதன் கூறிய வற்றில் உண்மை இருக்கலாம் ஆனால் அவன் 30 வருடங்களுக்கு முன் நடந்த தனது விடயத்திலே இன்னும் தன் சிந்தையை சிக்க வைத்து தன்னை அந்த சூழ்நிலைக்கு அடிமையாக்கியுள்ளான். இப்படியாக மனி தர்கள் தங்கள் வாழ்க்கையின் பின்ன டைவுகளை மற்ற மனிதர்கள்மேல் போட்டுவிடுகின்றார்கள். அதில் ஓரளவி ற்கு உண்மை இருக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலையிலே தரித்து நின்று சுய அனுதாபத்திலே மூழ்கிவிடாதிரு ங்கள். எங்கள் மீட்பராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது, அவர் எங்கே பிறந்தார்? எங்கே வாழ் ந்தார்? எப்படியாக சோதிக்கப்பட்டார்? அவரை எத்தனை பேர் பகைத் தார்கள்? எத்தனைபேர் இகழ்ந்தார்கள்? எத்தனைபேர் கொலை செய்யு ம்படி திட்டம் போட்டார்கள்? அவர் எங்கே மரித்தார்? என்பதை சிந்தி த்துப் பாருங்கள். இவைகளைக் குறித்து அவர் எப்போதாவது சுயஅனு தாபத்தை தேடியதுண்டா? முறு முறுத்ததுண்டா? இது என்ன ஓர் நிர்பா க்கியமுள்ள வாழ்க்கை என்று கூறியதுண்டா? அவர் எந்த வேளையிலும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதிலும், பிதாவின் சித்தத்தை நிறை வேற்றுவதிலும் ஆர்வமுள்ளவராக இருந்தார். பிரியமானவர்களே, இந்த உலகத்தை குறித்த உங்கள் எதிர்பாரப்;பு என்ன? சற்று சிந்தித்துப் பாரு ங்கள். “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிற தற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.” என்று கர்த்தரா கிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே ஆச்சரியப்படாதிருங்கள். தேவ னுடைய அன்பை ருசிபார்;க்க உங்களுக்கு தேவன் கிருபை செய்திரு க்கின்றார். உங்களை துன்புறுத்துகின்றவர்களின் இருதயம் தேவ அன்பை அறியாததினால், தன் சகோதரனைப் பகைத்த காயீனைப் போல மாறி விடுகின்றார்கள். பதிலடியாக நீங்கள் அவர்களை பகைப்பீர்களாக இரு ந்தால், கிறிஸ்துவின் அன்பு உங்களில் வாசமாயிருக்காது. சிலுவையில் தொங்கும் தறுவாயிலும் இயேசு தம்மை துன்பப்படுத்துகின்றவர்கள் தாம் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கின்றார்கள் என்று பிதா விடம் கூறினார். இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களில் நிலைத்திரு ந்தால், அவரைப் போல நீங்களும் உங்களை துன்பபப்படுத்துகின்றவர் களை மன்னியுங்கள்.

ஜெபம்:

மன்னிக்கின்ற தேவனே, என் பாவங்களை கிருபையாய் மன்னித்தவரே, அதைப் போல நானும் மற்றவர்களுடைய தப்பிதங்களை மனித்துவிட உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 3:11-13