புதிய நாளுக்குள்..

தியானம் (தை 17, 2021)

ஆதியில் செய்த கிரியைகள்

வெளிப்படுத்தல் 2:5

நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்தி ரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக


ஆதியிலிருந்த அன்பு (first love) உங்களில் நிலைத்திருக்கின்றதா? அதில் பெருகியிருக்கின்றீர்களா? அல்லது குறைவுற்றிருக்கின்றீர்களா? ஆதியிலிருந்த அன்பு என்றால் என்ன? ஆரம்ப நாட்களிலே இருந்த அன்பு. புதிதாக திருமணமாகிய தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஓர் உட லும் ஈருயிருமாய் நேசிக்கின்றார்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அந்த அன்பின் பிணைப்பு வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளி னால் சோதிக்கப்படும் போது, சிலர் அன்பிலே இன்னும் பிணைக்கப்படுகின் றார்கள் வேறு சிலரின் அன்பு தணிந்து போய்விடுகின்றது. இந்த சம்பவத்திலே கணவன்; மனைவி ஆகிய இருவருமே தவறிப் போகக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. நாங்கள் தேவனற்றவர்களும், பாவிகளுகமாக இருந்த வேளையிலே நாங்கள் அன்பு செய்யபடத்தக்கவர்க ளாக இருக்கவில்லை. அந்த வேளையிலே, பிதாவாகிய தேவன்தாமே முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தார். எங்கள் மேலிருந்த ஆக்கினையை நீக்கி, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நிலையான ராஜ்யத்திற்கு நம்மை பங்காளிகளாக மாற்றினார். தம்முடைய ஆவி யானவரை எங்களுக்குத் தந்தார். அந்த அன்பை ருசிபார்த்த ஆரம்ப நாட்களிலே, தேவனுக்காக எதையும் செய்வேன் என்ற வைராக்கியமும், மிகுந்த வாஞ்சையுள்ளவர்களாகவும் நாங்கள் தேவனை அன்பு செய் தோம். அந்த அன்பானது சூழ்நிலைகளால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது பலர் ஆதி அன்பை விட்டுவிலகி விடுகின்றார்கள். மேற்கூறிய கணவன்-மனைவி உறவில் இருவரும் தவறிப் போகலாம் ஆனால் எங் களை அன்பு செய்த தேவன் என்றும் மாறாதவராக இருக்கின்றார். நாங் கள் ஆதி அன்பிலிருந்து விலகிப் போகும் போது எங்களில் நாங்கள் காணக்கூடிய அறிகுறிகள் என்ன? அவற்றுள் இலகுவாக நாங்கள் அறிந்து கொள்ளக்கூடியவைகளாவன: வேதம் வாசிப்பதும், ஜெபிப்ப தும் குறைந்து போய்விடும், சபைகூடி வருவதற்கு சாக்குப் போக்கு களை கூறுதல் (முறுமுறுப்பு) போன்றவைகளே. ஆதி அன்பைவிட்டு விலகுவதற்கான காரணங்களை நாங்கள் ஒவ்வொருவரும் சற்று ஆரா ய்ந்து பார்க்க வேண்டும். நாங்கள் எங்கே வழி தவறிச் சென்றோம் என் பதை அறிந்து, மனந்திரும்பி, ஆரம்ப நாட்களில் நீங்கள் செய்த கிரி யைகளை மறுபடியும் செய்ய வேண்டும்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்த எங்களை உம்முடைய பிள்ளைகளாய் மாற்றினீர். மறுபடியும் பழைய வாழ்விற்கு திரும்பாதபடி காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 2:1-9