புதிய நாளுக்குள்..

தியானம் (தை 15, 2021)

கிருபையின் நாட்கள்

எபேசியர் 5:16

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த மனிதர்கள் மேற்கத்தைய வல்லரசு நா டொன்றைப் பற்றிய காரியங்களை செய்திகள் வாயிலாக மட்டுமே கேள் விப்பட்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு செயற்திட்டத்தை நடத்துவதற்காக குறிப்பிடப்பட்ட மேற்கத்தைய நாட்டிலிருந்து, அந்த கிராமத்திற்கு ஒரு பிரதிநிதி வந்திருந்தார். அவர் பிறந்த நாளிலிருந்து அந்த நாட்டிலே வாழ்ந்தவராகையால் அந்த நாட்டை குறித்த காரியங்களைப் பற்றி மிகவும் தெளிவாக அந்த கிராம மக்களுக்கு எடு த்துரைத்தார். அவர் அந்த நாட்டிலிரு ந்து வந்தபடியால் அந்த நாட்டைக் குறி த்து திட்டமாக அறிந்திருந்தார். அது போலவே பரலோகத்திலிருந்து இறங்கி வந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு வரே பரலோகத்தைக் குறித்து திட்டமாக அறிந் திருந்தவராகையால் அதைக் குறித்து விளக்கிக் கூறியதாவது: இந்த உலகிலே சுகபோ கமாக வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன், விலையேறப்பெற்ற வஸ் திரமும் தரித்து, அனு தினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். அவன் வாசல்படியிலிருக்கும் ஏழை மனிதனாகிய லாசரு என்பவன் செல்வந்தனின் மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசி யை ஆற்ற ஆசையாயிருந்தான்;. நாட்கள் சென்று இருவரும் மரித்தார் கள். அந்தத் ஏழை மரித்து, தேவதூதரால் பரிசுத்தவான்களிருக்கும் இடத்திற்கு கொண்டுபோய் விடப்பட்டான்;. செல்வந்தனும் மரித்து பாதா ளத்திலே வெகுவாய் வேதனைப்படுகிறபோது, நரகம் என்று ஒரு இடம் இருக்கின்றது என்பதையும் கண்டு கொண்டான். லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; என்று வேண்டினான். இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்தி ற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக் கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என அவனுக்கு பதில் கூறப்பட்டது. உயிரோடிக்கும் சகோதரர்களுக்கு இந்த உண்மையை அறிவிக்க லாசருவை மறுபடியும் அனுப்ப வேண் டும் என்று வேண்டினான். உலகிலிருக்கும் தேவ ஊழியர்களுக்கு உன் சகோதரர்கள்; செவிகொடுக்காவிடில், இங்கிருந்து போகின்றவர்களு க்கும் செவிகொடார்கள் என்று அவனுக்கு கூறப்பட்டது. பிரியமானவர் களே, உணர்வுள்ள இருதயத்தோடே கொடுக்கப்பட்ட கிருபையின் நாட் களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நீதியின் தேவனே, கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவ கோபாக்கினை வரும் காலம் நெருங்குகின்றது என்பதை உணர்ந்து, கிருபையின் நாட்களை பிரயோஜனப்படுத்தும்படி வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:1-7