புதிய நாளுக்குள்..

தியானம் (தை 14, 2021)

அறியாத நேரம் வந்திடுவார்

மத்தேயு 24:42

உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.


வானிலையை பற்றிய அறிவுள்ள மனிதனொருவன், சில நாட்களுக்குள் வரவிருக்கும் பெரும் புயலைப்பற்றி தன் ஊரில் வாழ்ந்த ஜனங்களுக்கு எச்சரிப்பு விடுவித்தான். ஜனங்களில் பலர் எவ்வித ஆயத்தமும் இல் லாமல், அவன் கூறியவற்றை அற்பமாக எண்ணி தங்கள் அனுதின நடவடிக்கைகளை வழமைபோல தொடர்ந்தார்கள். சில நாட்களுக்கு பின், இராத்திரி வேளையிலே, சடிதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெருங்காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து நெடுஞ்சாலைகளை அடைத்துக் கொண்டது. வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை யிலே, அந்த மனிதன் கூறியவற்றை நாங்கள் அசட்டை செய்தோம் என்று ஜனங்கள் மனவருத்தப்பட்டார்கள். மன வருத்தத்தினால் அவர்களுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஆயத்தப்பட வேண்டியநாட்கள் முடிந்தது. வெளியிலோ காரிருளும், பெருங் காற் றும், அடை மழையுமாக இருந்தது. இரவு கடந்து, அந்த ஊராருக்கு உதவி வருமுன்னரே, அங்கே பேரழிவு ஏற்பட்டது. இவ்வண்ணமாகவே, இந்த உலகிலே மனிதர்கள் நடமாடமுடியாத காரிருள் நிறைந்த நாட்கள் வருகின்றது. ஆனாலும் மனிதர்கள் தேவனாகிய கர்த்தரின் வார்த்தையை கேட்டும் அதை அசட்டை செய்கின்றார்கள். உலகம் உருவாகி பல ஆயி ரம் வருடங்கள் கடந்துவிட்டது சகலமும் சிருஷ்டிப்பின் தோற்ற முதல் இரு ந்தவிதமாகவேயிருக்கிறதே என்று கூறி, அழிவு வாசல்படியில் வரும்வ ரைக்கும் மனிதர்கள் தங்கள் இருதயங்களை கடினப்பபடுத்திக் கொள் ளுகின்றார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. பிரியமானவர் களே, உலகத்தின் முடிவைக் குறித்த இந்த மெய்யான வார்த்தைகள் எனக்கும் உங்களுக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருகின்றது. தேவ கிருபையின் நாட்களிலே நாம் வாழ்ந்து வருகின்றோம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித் துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்தி ரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயி ருக்கிறார். நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளான வர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங் காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.” தேவ எச்சரிப்பின் சத்தத்தைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, உம்முடைய நாளுக்கென்று கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே உம் சந்நிதியில் காணப்படும்படி பிரசாமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:1-14