புதிய நாளுக்குள்..

தியானம் (தை 12, 2021)

தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்

சங்கீதம் 73:28

எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்.


இதோ, அவர்கள் தவறான வழிகளிலே நடப்பவர்கள். அவர்கள் கண் கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கின்றது. அவர்கள் இருதயம் விரு ம்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. அவர்கள் சீர்கெட்டுப்போய், அக ந்தையாய்க் கொடுமையைப் பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறா ர்கள். இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்ப ண்ணுகிறார்கள் என்று மற்றவர்களை குறித்ததான எண்ணம் சில வேளைகளிலே தேவபிள்ளைகளின் இருதயத்தில் எழும்புவதுண்டு. துன் மார்க்கர் இவ்வண்ணமாக செழித்தி ருக்க நான் ஏன் விருதாவாக என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, என் கைகளை குற்றங்களுக்கு விலக்கிக் காக்க வேண்டும்? நாள்தோறும் நான் செய்யும் சிறிய குற்றங்களுக்குக் கூட நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கி றேன் என்று ஒரு தேவ ஊழியருக்கு யோசனை உண்டாயிற்று. ஆனால் அந்த ஊழியர் தன்னுடைய யோசனை மிகவும் தவறானது என உணர்ந்தபோது, தன்னிலையுணர்ந்தவராய் இவ்விதமாய்ப் நான் பேசியதால் நான் காரியம் அறியாத மூடனைப்போலவும் தேவனுக்கு முன்பாக மிருகம் போலவுமிருந்தேன் என மனவருத்தப்பட்டார். அவர் தேவனை நோக்கி: நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்து நீர் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். பரலோகத் தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. எனக்கோ, தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம் என்று அறிக்கையிட்டார் (சங்கீதம் 73). பிரிய மானவர்களே, உன்னதமான தேவனுடைய ஆவியை பெற்றவர்களே, நித்திய வாழ்விற்கு அழைப்பைப் பெற்றவர்களே, ஒரு வினாடி கூட துன்மார்க்கரின் வழியைக் கண்டு சோர்ந்து போய்விடாதிருங்கள். துன்ம hர்க்கமான வாழ்க்கை வாழ தங்களை அர்ப்பணித்தவர்கள் இந்த உலக திலுள்ளவைகளை நாடித் தேடுகின்றார்கள். இந்த உலகமும் அதிலுள் ளவைகளும் அழிந்து போகும். நித்தியமானதையும், அழியாததையும், கர்த்தர் நமக்காக வைத்திருக்கின்றார். எனவே, பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாமலும், நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொ றாமை கொள்ளாமலும், கர்த்தரை நம்பி நன்மைசெய்;யுங்கள். கர்த்தரிட த்தில் மனமகிழ்ச்சியாயிருங்கள்;. உங்கள் வழியைக் கர்த்தருக்கு ஒப்பு வித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.

ஜெபம்:

நீதிசெய்கின்றவன் இன்னும் நீதி செய்யட்டும் என்ற தேவனே, துன்மார்க்கரின் வழிகளை கண்டு நான் சோர்ந்து போகாமல், எப்போதும் உம்மையே அண்டிக் கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - சங்கீதம் 37:1-9