புதிய நாளுக்குள்..

தியானம் (தை 09, 2021)

இழந்து போனவைகள் மீட்ப்படைய வேண்டும்

லூக்கா 19:10

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த எளிமையான குடிமக்கள், முறைப்படி தேவ பக்தி, கல்வி, சுகாதாரம், சமூக நன்நடத்தை போன்ற விடயங்களை கற் று கொள்வதற்காக அந்த ஊரிலிருந்த சில மூப்பர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சிறிய பாடசாலையை அமைத்தார்கள். அங்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையோடு, அந்த ஊர் மக்களின் நலனுக்காக அயராது உழைத்து வந்தார்கள். பல ஆண்டுகள் கடந்து சென்றதும், அதன் பலனாக, அந்த ஊரிலுள்ள மாணவ மாணவிகள் தேசிய மட்டப் பரீட்சையில் அதிவிசேட சித்திய டைந்தார்கள். இந்த நிலை அதிகரித்துக் கொண்டு சென்றதால், மற்ற ஊரிலிருந்த பலர் இந்த பாடசாலையில் தாமும் கல்வி கற்க விரும்பினார்கள். அதற்காக அதிக பணத்தை நன்கொடையாக கொடுக்க முன்வந்தார்கள். காலப்போக்கில், அதனால் வரும் இலா பத்தை கண்ட பாடசாலை நிர்வாகிகள், பாடசாலை கட்டிடத்தை பெரி தாக்கி, அநேகர் அங்கு வந்து கற்றுக் கொள்ளும்படி அனுமதி வழங்கினார்கள். பல ஐசுவரியவான்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பாட சாலையில் சேர்ப்பதற்காக திரளான நன் கொடைகளை கொடுத்து வந் ததால், எளிமையானவர்களுக்கும் ஏழைகளுக்கும் அந்த பாடசாலையிலே அனுமதி எடுப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்து வந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அந்த ஊரிலுள்ள பாடசாலை, தேசிய மட்டத்திலே பிரபல்யமான பாடசாலையாக விளங்கிய போதும், அந்த ஊரிலுள்ள எளிமையான குடிமக்களுக்கு அந்த பாடசாலையில் அனுமதி எடுக்க முடியாமல் போய்விட்டது. அந்த ஊரிலே இருக்கும் பிரபல்ய மான அந்த பாடசாலையினால் அந்த ஊரின் குடிமக்களுக்கு என்ன பலன்? சற்று சிந்தித்துப் பாருங்கள். போகும் வழி தெரியாமல், மேய் ப்பனில்லாத ஆட்டைப் போல அலைந்து திரிகின்ற எளிமையானவர்களையும், பாவிகளையும் இரட்சிப்பதற்காகவே ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையோ அல்லது எங்கள் குடும்ப வாழ்க்கையோ அல்லது நாங்கள் ஆராதிக்கச் செல்லும் ஆலயமோ ஒரு போதும் அந்த ஊரிலுள்ள பாடசாலையின் நிலைக்கு தள்ளுண்டு போகக்கூடாது. பாதை தெரியாமல் சிதறுண்ட ஆடுகளை ப்போல இருக்கும் ஜனங்கள்; தங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமான இயேசுவினிடத்திற்கு திரும்பும்படிக்கு அவர்கள் உள் ளமும், இல்லமும், அவர்கள் ஒன்றுகூடும் ஆராதனை ஸ்தலங்களும் அமைக்கப்பட்டி ருக்க வேண்டும்.

ஜெபம்:

நீதியின் தேவனே, இந்த உலகிலே வாழும் நாட்களிலே, என் வாழ்விலே, உம்முடைய திருச்சித்தத்தை உணர்ந்து அதன்படி கிரியைகளை நடப்பிக்க மனப்பிரகாசமுள்ள கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:24-25