புதிய நாளுக்குள்..

தியானம் (தை 08, 2021)

நேர்வழியிலே நடவுங்கள்

சங்கீதம் 119:101

உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.


“உன்னுடைய பன்னிரண்டாம் வகுப்பின் உயர்தரப் பரீட்சையில் நீ சித்தி பெறவேமாட்டாய். உன்னுடைய மேற்படிப்பை தொடருவதற்கு உனக்கு சந்தர்ப்பம் கிடையாது.” என்று என்னுடைய வகுப்பாசிரியர் என்னைக் கடிந்து கொண்டார். ஆனாலும்; நான் பரீட்சையில் சித்திபெற்று இப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன் என்று பெருமிதமாக ஒரு வாலிபன் கூறிக் கொண்டான். தந்தையார் அவனை நோக்கி: மகனே, நீ சித்தியடைந்து, பல்கலைகழகத்திலே படிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஆனால் அந்த ஆசிரியர் ஏன் உனக்கு அப்படி கூறினார் என்று சற்று சிந்தித்துப் பார். அந்நா ட்களிலே, நீ தவறான வழியிலே செ ன்று கொண்டிருந்தாய். வீட்டிலும், பாட சாலையிலும் உன் தவறான போக்கி னால் பலருக்கு பல தேவையற்ற வேதனைகள் உண்டாயிற்று. அதனால் சில பாடங்களை நீ மூன்றுமுறை திரும்பத் திரும்ப எடுக்க வேண்டி யதாக இருந்ததே என்று கூறினார். பொதுவாக மனிதர்கள் தாங்கள் செல்லும் தவறான வழிகளையும், அந்த வழியிலே செல்வதனால் வரும் பின்விளைவுகளையும் யாரும் சுட்டிக் காட்டுவதை விரும்புவதில்லை. தங்களை வழிநடத்த நியமிக்கப்பட்டவர்களின் ஆலோசனைகளை அவர் கள் அசட்டை செய்வதால், நேரடியாகவும் இலகுவாகவும் செல்ல வேண்டிய பிரயாணத்திலிருந்து பல வழிமாற்றங்களை (Detour) தங்கள் வாழ்க்கையில் தாங்களே ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இதனால் அவர்களுடைய வாழ்க்கையிலும் அவர்களை சூழ உள்ளவர்களின் வாழ்க்கையிலும் பல நோவுகளை ஏற்படுத்தி விடுகின்றார்கள். தங்களை நல்வழிப்படுத்தும் வழிகாட்டிகளை குறித்த கசப்பை தங்கள் உள்ள த்திலே வளர்த்து விடுகின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவனுடைய வசனம் எங்கள் கால்களுக்குத் தீபமும், நாங்கள் செல்ல வேண்டிய பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அந்த வழியிலே தங் கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்கள் தங்கள் வழிகளி லிருந்து தவறி, வழி மாற்றங்களை (Detour) ஒருபோதும் ஏற்படுத்திக் கொள்வதில்லை. இவர்கள் எப்போதும் தங்களுக்கு ஆலோசனை கூறி தங்களை நல்வழிப்படுத்தும் வழிகாட்டிகளுக்கு கீழ்ப்படிகின்றார்கள். எனவே உங்களுக்கு தேவ ஆலோசனைகளை கூறி நல்வழிப்படுத்து கின்றவர்களுக்கு கீழ்ப்படிந்து நடவுங்கள். அதனால் வாழ்விலே அநா வசியமான நோவுகளை நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

ஜெபம்:

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே, உம்முடைய வழிகள் நித்தியமானவைகள். அதிலே நடக்கின்றவர்கள் பாக்கியமுள்ளவர்கள். அந்த வழியிலே நான் நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:6