புதிய நாளுக்குள்..

தியானம் (தை 07, 2021)

மனுஷனுடைய பிரயாசம்

பிரசங்கி 6:7

மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.


இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கின் றார்கள், கடுமையாக உழைக்கின்றார்கள். ஏன் அப்படியாக செய்கின் றார்கள்? இந்த உலகத்திலே க~;டப்படாமல், தாராளமாக பணம் சம்பா தித்து தாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று பிரயாசப்படுகின்றார்கள். கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை பிரயோஜனப்படுத்தி, இளவயதிலே கல்வியை சீராக கற்பதும், பின்பு உற்சாகத்துடன் உழைப்பதும் பிள் ளைகளுக்கு நல்லது. ஆனால், கல்வியினால் மட்டும் ஒரு மனிதனுக்கு மனச் சமாதானத்தை கொடுக்க முடியுமா? கடுமையாக உழைப்பதினால் மட்டுமே ஒரு மனிதனுடைய வாழ்வில் மனத்திருப்தி உண்டாகி விடுமோ? ஒரு வேளை இவைகளினால் ஒரு மனித னானவன் தன் சரீரத்திற்கு தேவை யானவற்றை இந்த உலகிலே பெற் றுக் கொள்ளலாம். இந்த உலகிலே மனிதர்கள் மத்தியிலே அங்கீகாரத் தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆன்மீக சமாதானத்தையும், மனத்திரு ப்தியையும் விலை கொடுத்து வாங்க முடியாது. ஏனெனில் அவைகள் இந்த உல கத்தினால் உண்டாகுவதில்லை. ஆன்மீக சமாதானம் தேவனு டைய ஈவு. இதை உணர்ந்து கொள்ள முடியாதபடிக்கு, இந்த உலகிலு ள்ள கல்விமான்கள் மற்றும் ஐசுவரியவான்களின் மனக் கண்கள் இரு ளடைந்து போகின்றது. இவர்களிடம் துன்மார்க்கத்திற்குரிய மதுபான வெறி கொள்ளலும், களியாட்டங்களும், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை போன்ற கிரியைகள் இல்லாதிருக்கலாம் ஆனால் பொரு ளாசையானது (பண ஆசை) இவர்களை அறியாமலேயே இவர்கள் உள்ளத்தை ஆட்கொண்டுவிடுகின்றது. பண ஆசையானது வாழ்விலே எல்லாத் தீமைக்கும் வேராக இருக்கின்றது என பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. இந்த நிலைமையானது, பிசாசானவனினால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் இருதயம் கடினப்பட்டு விடுகின்றது. பிரியமானவர்களே, சற்று தரித்தி ருந்து சிந்தியுங்கள். உங்களுக்கு உண்டாகும் சோதனைகள் எல்லாம் ஆரம்பத்திலே தீமையாகத் தோன்றாது. அவை நன்மையானதும் அவசி யமானதும் என்பது போல எமக்கு காட்சியளிக்கும், பின்பு படிப்படியாக அவை உங்கள் வாழ்க்கையை பற்றிக் கொள்ளும். தேவனுக்கு பயந்து அவருடைய வழியிலே நடப்பதையே தெரிந்து கொள்ளுங்கள். அவரே உங்களுக்கு ஆன்மீக சமாதானத்தை தந்து வழிநடத்துவார்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, போதுமென்கிற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என்ற உண்மையை நான் மறந்து விடாமல் உம்மிலே நிலைகொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:9-10