புதிய நாளுக்குள்..

தியானம் (தை 06, 2021)

எங்களில் இருப்பவர் பெரியவர்

1 யோவான் 4:4

உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.


இந்த உலகிலுள்ள எல்லா பாடசாலைகளிலும் தவணைக்குத் தவணை மணவர்களுக்கான பரீட்சை (சோதனை) நடத்தப்பட்டுவருகின்றது. பாடசாலையிலே பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களால் நடத்தப்படும் பரீட்சைகளைவிட இன்னும் பல சோதனைகளை மாணவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். சில மாணவர்களுக்கு வீட்டிலே படிக்கக்கூடிய சூழ்நிலைகள் இல்லை. வேறு சிலர், பாடசாலைக்கு செல்லும் சக மாணவ மாணவிகளால் பல அழுத்தங்களுக்கு உள்ளாகின்றார்கள். பாடங்களை கற்கும் மாணவர்கள் அதை முறையாக கற்றுக் கொள்ளாத படிக்கு, அவர்கள் எண்ணங்களை வேறு நெறிமுறையற்ற காரியங்களுக்கு திசை திருப்பி விடுகின்றார்கள். இப்படியாக நன்மையை நாடி பாடசாலைக்கு செல்லும் மாணவ மாண விகள் நாளுக்கு நாள் பலவிதமான சவால்களை எதிர்நோக்குகின்றார்கள். அதனால் படிப்பை விட்டுவிடுவது சரியாகுமோ? பாடசாலை வேண்டாம் என்று தள்ளிவிடுவது சரியாகுமோ? இல்லை. இவ்வண் ணமாகவே இந்தப் பூமியிலே எங்கள் வாழ்க்கையும் அமைந்திருக்கி ன்றது. இந்தப் பூமியிலே தேவனுடைய சித்தத்தை செய்ய விரும்பி, அந்த வழியிலே நடக்கும் மனிதர்கள் பல சவால்களை எதிர்நோக்குகி ன்றார்கள். பலர் உபத்திரவங்களுக்குட்படுத்தப் படுகின்றார்கள். அதற்கு எவருமே விதிவிலக்கானவர்கள் அல்லர். மனித குலத்தை மீட்கும்படி உலகிலே பிறந்த ஆண்டவர் இயேசு பல சவால்கள், உபத்திரவங்கள் மத்தியிலே தேவனுடைய சித்தத்தை செய்து முடித்தார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தடுத்து நிறுத்தும்படிக்கு, பிசாசானவன் ஆண் டவர் இயேசுவை சோதித்தான். அன்றைய நாளிலிருந்த மதத்தலைவர்க ளால் பெரும்பான்மையானோர் இயேசுவுக்கு எதிராக செயற்பட்டு கொண் டிருந்தார்கள். அவைகள் மத்தியிலும் இயேசு பிதாவின் திருச்சித்தத்தை பரிபூரணமாக செய்து முடித்தார். எங்களுடைய நாளாந்த வாழ்க்கையி லும் நாங்கள் பிதாவின் சித்தத்தை செய்து முடிக்காதபடி தடைப்படுத் தும் பல தீய சக்திகள் உண்டு. அவற்றை கண்டு சோர்ந்து போகாதிருங் கள். நாங்கள் அவற்றை ஜெயம் கொள்ளும் பொருட்டு, எங்களை வழி நடத்தும் தூய ஆவியானவர் எங்களோடு இருக்கின்றார். அவர் இயேவின் நாமத்திலே எங்கள் பயத்தை அகற்றி, பெலவீன நேரத்திலே கிருபை அளிக்கின்றார். நாம் இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்தங்களை கண்டு பின்னிட்டு போகாமல், இயேசுவின் நாமத்தில் முன்னேறுவோம்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்தங்களினால் நான் பின்னிட்டுச் சோர்ந்து போகாதபடிக்கு உம்மு டைய திருச்சித்தத்தை என் வாழ்வில் நடத்தி முடிக்க கிருபை செய்வீ ராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:15