தியானம் (தை 05, 2021)
நிலையான நகரம் நமக்கிங்கில்லை
எபிரெயர் 13:14
நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
ஒரு குடும்பத்தினர், சமாதானமான வாழ்வை நாடி, தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து, தூரத்திலுள்ள ஊருக்கு சென்று கொண்டிருந்தார்கள். போகும் வழியிலே கண்ணைக் கவரும் பல காட்சிகளை கண்டார்கள். இடைவெளியிலே, சில இடங்களிலே அவர்கள் சற்று தரித்து நின்ற போது, அந்த இடத்திலே பல மனமகிழ்ச்சியைத் தரும் உல்லாசமான நிகழ்ச்சிகள் (fun) நடப்பதைக்; கண்டு அங்கு சில நாட்களை கழித்தார்கள். இப்படியாக அவர்கள் சில இடங்களி லே தரித்து நின்ற போது, தாங்கள் ஆரம்பித்த பிரயாணத்தின் நோக்கத் தை மறந்து கிடைக்கும் சந்தர்ப்பங்களிலே உல்லாசமாக இருப்போம் என்று தங்களை அறியாமலே உலக போக் கிற்குள் சிக்கிக் கொண்டார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, இவ்வண்ணமாகவே, பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் ஏன் பாடசாலைக்கு செல்கின்றோம் என்ற நோக்கத்தையும், வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் ஏன் வேலைக்கு செல்கின்றோம் என்ற நோக்கத்தையும் மறந்து, வேறு காரியங்களிலே தங்கள் புலன்களை செலுத்தி தங்கள் வாழ்வில் பெரிதான நோவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இந்த உலகிலே வாழும் மனிதர்களுக்கு ஒரு மேலான அழைப்பும் நோக்கமும் உண்டு. இந்த பூமி எங்கள் நிரந்தர வசிப்பிடம் அல்ல. பரம யாத்திரிகளாக, வாடகை வீட்டில் வாழ்வதுபோல் இந்தப் பூமியை கடந்து, நாங்கள் தாபரிக்கும் ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றோம். அந்த மேலான நோக்கத்தை நாங்கள் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. இந்த உலகத்திலே என்னத்தை அனுபவித்தீர்கள்? வாழும்வரை உல்லாசமாக இருப்போம் என்பது மனித அறிவுக்கு ஏற்புடையதாக இருக்கலாம் ஆனால் அது பிதாவாகிய தேவனுடைய திட்டமல்ல. உலகத்திலும் உல கத்திலுள்ளவைகளிலும் உங்கள் கண்களை பதிய வைக்காதிருங்கள். அவைகள் அநித்தியமானவைகள். உலகமும் அதின் ஆசை இச்சையும் ஒழி ந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் தன் ஆத் துமாவை நித்திய மரணத்தினின்று காத்துக் கொள்கின்றான். பூமியிலே உங்க ளுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்காதிருங்கள் அவை யாவும் அழிந்து போகும். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்க ளைச் சேர்த்து வையுங்கள்; அவை நித்தியமானவைகள். உங்கள் பொக் கி~ம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். எனவே நிலையான பரலோகத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்.
ஜெபம்:
பரலோக தேவனே, இந்த உலகத்தின் போக்கின்படி வாழ்ந்து, உம்முடைய மேலான நோக்கத்தை மறந்து என் வாழ்க்கையை நான் அழித்துக் கொள்ளாதபடிக்கு என்னை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:19-21