புதிய நாளுக்குள்..

தியானம் (தை 04, 2021)

பிதாவாகிய தேவனுக்குரிய கனம்

மல்கியா 1:6

நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே


ஒரு கிராமத்திலே வசித்து வந்த பக்தியுள்ள இளைஞன் ஒருவன், தான் வானொலியில் தேவ கானங்களை பாட வேண்டும் என்று மிகவும் வாஞ்சையுள்ளவனாக இருந்தான். அதை முன்னிட்டு, தான் பாடிய பாடல் ஒன்றை இசைத்தட்டில் பதித்து, குறிப்பிட்ட பிராந்திய வானொலி ஸ்தாபனமொன்றிற்கு விண்ணப்பித்திருந்தான். பல மாதங்களுக்கு பின் அந்த வானொலி ஸ்தாபனத்தின் இசைப் பிரிவின் நிர்வாகிகளிடமிருந்து அவனுக்கு பதில் வந்திருந்தது. அதன்ப டிக்கு, குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை யொன்றிலே, காலையிலே ஒத்திகை க்காக வரும்படிக்கு அழைப்பு விடுத்தி ருந்தார்கள். கிடைப்பதற்கு அரிதான சந்தர்ப்பமொன்று உனக்கு கிடைத்திரு க்கின்றது என அவன் நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அந்த இளை ஞன் “ஞாயிறு காலையானது நான் என்னை படைத்த தேவனை ஆராதிக்கும் நாள், என் வாழ்க்கையிலே அது மிகவும் முக்கியமான நியமனம் (appointment), எனவே நீங்கள் குறிப்பிட்ட நாளிலே எனக்கு ஒத்திகைக்கு வர முடியாது” என பதில் அனுப்பியிருந்தான். அதைக் கேள்விப்பட்ட சபையின் வயது சென்ற ஊழியர் அவனை நோக்கி: “தம்பி, பிராந்திய வானொலியில் பாட க்கிடைப்பது அரிய சந்தர்ப்பம், ஆனால் இக்காலத்திலே, எங்களை நேசிக்கின்ற தேவனாகிய கர்த்தரை தொழுதும் கொள்ளும் நாளைக் குறித்து உன்னிடமிருக்கும் வைராக்கியம் அதைவிட மிகவும் காண்ப தற்கரிதான செயல். அதைவிட்டுவிடாதே, இறுக்கப்பற்றிக் கொள்” என்று அவனை பாராட்டினார். பிரியமானவர்களே, இந்த உலகிலே பிரப ல்யமானவர்களையும், பதவியிலுள்ள மனிதர்களையும் சந்திப்பதற்காக, மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க எப்போதும் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் வானமும் பூமியும் படைத்த சர்வ வல் லமையுள்ள தேவனுக்குரிய கனத்தை அற்பமாக எண்ணுகின்றார்கள். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் எதை மேன்மைப் படுத்துகின்றோமோ, அதனால் வரும் பலனை பெற்றுக் கொள்வோம். தேவனுக்குரிய கனத்தை மேன்மைப்படுத்துகின்றவன், அவராலே அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றான். இந்த உலக காரியங்களை தன் வாழ்க்கையிலே தேவ னுக்கு மேலாக உயர்த்துகின்றவர்கள் இந்த உலகத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். எனவே, பிரியமுள்ள பிள்ளைகளாக பிதா வாகிய தேவனுக்குரிய கனத்தை அவருக்கு கொடுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்பதை உணர்ந்து, உம் நாமத்திற்குரிய கனத்தை மனதார செலுத்தும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:7-8