புதிய நாளுக்குள்..

தியானம் (தை 03, 2021)

நானும் என் வீட்டாரும்

யோசுவா 24:15

நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என் றான்.


எனக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்திருக்கின்றது. நல்ல பதவி, அதிக சம்பளம், வருடாந்த மிகை ஊதியம், மருத்துவ சலுகைகள், தாராளமான விடுமுறை நாட்கள் உள்ளடக்கியது என்றும் தன் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது என்றும் ஒரு மனிதனானவன் கூறினான். மாதங்கள் கடந்து சென்ற போது அவனை அறியாமலே அவன் தன் வேலையிலே அதிக நேரத்தை செல விட ஆரம்பித்தான். வேலைப் பழுவிலிருந்து ஒரு இடைவெளி தேவை ப்படும் போது, விடுமுறை நாட்களை எடுத்து, குடும்பத்தோடு உல்லாசப் பய ணங்களுக்கு சென்று வந்தான். “அவன் உழைக்கின்றான், தன் பிரயாசத்தின் பலனை அனுபவிக்கின்றான்”. அதில் என்ன தவறு? ஆனால் தற்போதைய சூழ்நிலையிலே படைத்த தேவனை ஆராதிப்பது என்பது அவனுடைய வாழ்க்கையில் தேவையா னதொன்றாக அவனுக்குத் தெரியவில்லை. தேவனுடைய சமுகத்திலே தரித்திருந்து ஜெபம் செய்ய அவனுக்கு நேரமில்லை. நிம்மதியான வாழ்வைத் தரும் சத்திய வேதத்தை வாசிக்க சமயமில்லை. பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த உலகமும் அதன் வே~மும் சீக்கிரமாய் கடந்து போகின்றது. தேவனுக்கும் உங்களுக்கும் இடையிலே எதுவும் வராதபடிக்கு உங்கள் வாழ்க்கையை நீங்கள் காத்துக் கொள்ள வேண் டும். தேவனற்ற செல்வந்தனின் வாழ்க்கையைவிட, தேவனோடிருக்கும் ஏழையின் வாழ்வு மேலானது. இந்த புதிய ஆண்டிலே உங்கள் வாழ்க் கையை நன்கு ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு சமாதான வாழ் வைத் தரும் தேவனையும், தேவனுடைய சமூகத்தையும்விட்டு பிரிக்கும் படியாக உங்கள் வாழ்க்கையிலே நன் மையாக தோன்றும் காரியங்கள் எவை என்பதை அறிந்து அவைகளை உங்களைவிட்டு அகற்றி விடுங் கள். இன்று மனிதர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடியி ருக்கும் பரிசுத்தத்தையே தேடுகின்றார்கள். பிரியமானவர்களே, அது தேவன் விரும்பும் பரிசுத்தம் அல்ல. பரிசுத்த வாழ்வை காத்துக் கொள் ளும்படியான வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த உலக போக்கிற்கு உடன் படாதபடிக்கு தேவனுயை சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும்படி கருத்துள்ள வாழ்க்கையை அமை த்துக் கொள்ளுங்கள். தேவனை உண்மையாய் சேவிப்பவர்கள் முதலா வதாக தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் நாடித் தேடு வார்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கிருபையின் நாட்களிலே தேவனிடம் கிட்டிச் சேருங்கள்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, இந்த உலகின் போக்கின்படி நன் மையாக தோன்றும் காரணிகளை இனங்கண்டு அவைகளை என்னை விட்டு அகற்றிவிட பிரகா சமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:2