புதிய நாளுக்குள்..

தியானம் (தை 02, 2021)

காட்சிக் கூடம்

1 தெச 5:11

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.


ஒரு பிராந்தியத்திலுள்ள வர்த்தர்கள் யாவரும் வருடத்திற்கு ஒருமுறை ஒன்று கூடி வர்த்தக சம்மேளன கருத்தரங்கை நடாத்தி வந்தார்கள். அவர்கள் ஒன்றுகூடி வரும்போது, ஒவ்வொரு ஸ்தாபனங்களும் தங்கள் வியாபாரத்தை குறித்த காட்சிக் கூடம் (Showcase) ஒன்றை வைத்து, தங்கள் வியாரபாரத்தை குறித்த தனித்துவத் தையும் மேன்மையையும் வெளிக்கா ட்டுவார்கள். ஆனால் அவர்கள் அங்கு ஒன்று கூடி வந்தாலும், அவர்கள் மத் தியிலே, அவர்களுக்குள், மறைமுக மாகவோ அல்லது வெளிப்படையா கவோ எப்போதும் வியாபார போட்டி (Competition) இருந்து வந்தது. பர லோக யாத்திரிகளாகிய எங்கள் வாழ் க்கையிலும், இயேசுவின் நாமத்திலே, பல ஒன்றுகூடல்களை நாம் நட த்தி வருகின்றோம். அதாவது குடும்ப உறவுகள் மட்டத்திலே, நண்பர்கள் மத்தியிலே, சமுகத்திலே, சபையிலே நாங்கள் பல ஒன்றுகூடல்களை நடத்தி வருகின்றோம். எங்கள் ஒன்றுகூடல்கள் வியாபார காட்சிக் கூடம் போல இருக்கலாகாது. நாங்கள் இந்த உலகத்திலே வாழ்ந்தாலும், நாங்கள் எங்கள் உடன் சகோதரர்களுக்கு போட்டியாளர்கள் அல்ல. என்னைப் பார், என் வாழ்க்கையைப் பார், என்று நாங்கள் எங்கள் வாழ் க்கையைக் குறித்து பெருமைபாராட்டலாகாது. எங்கள் வாழ்க்கையி லேற்பட்டிருக்கும் உயர்வுகள் தேவனால் உண்டானதாக இருந்தால், தேவனுடைய பாதத்திலே எங்களை தாழ்த்தி, அந்த உயர்வுகளை எம க்கு தந்த தேவனை நாங்கள் மகிமைப் படுத்தும்படி, எங்கள் வாழ் க்கையின் கிரியைகள் அமைய வேண்டும். நாம் மிகுந்த மனத்தாழ்மை யும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒரு வரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்க வேண்டும்;. ஒரு கிறிஸ்தவனானவன் தன் வாழ்க்கையின் வழியாக இயேசுகிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும்படியான ஒரு காட்சிக் கூடத்தை தன்னிலே உடையவனாக இருக்கின்றான். அந்த காட்சிக் கூடத்திலே மாயமற்ற தாழ்மையானது இருக்கும். அந்த காட்சிக் கூடம் தேவனுடைய அங்கீ காரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த புதிய ஆண்டிலே குடு ம்பமாக சபையாக எங்களை தாழ்த்தி ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு எங்களை அழைத்த தேவனே, பரலோக யாத்திரிகளாகிய நாங்கள், தாழ்மையுள்ள உள்ளத்தோடு ஒருவரை ஒருவர் தேற்றி தேவ சித்தத்தை நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:1-6