புதிய நாளுக்குள்..

தியானம் (தை 01, 2021)

பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு

1 யோவான் 3:1

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்;


இந்தப் பூவுலகிலே, மனிதர்கள் செல்வந்தர்களாகவோ அல்லது தங்கள் மாதாந்த ஊதியத்தின் அடிப்படையில் வாழ்கின்றவர்களாகவோ அல்லது நாளாந்த கூலிகளாகவோ இருக்கின்றார்கள். இன்னும் சிலர் வறுமைக் கோட்டின் கீழ் தங்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளை சந்திப்பத ற்கு மிகவும் க~;டப்பட்டுவருகின்றார்கள். பொருளாதார நிலைமை எப்படியாக இருந்தாலும், தங்களிடமி ருக்கும் நிர்வாகத்தின் அளவின்படி, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்போதும் சிறந்ததை கொடுக்க வே ண்டும் என்று உழைக்கின்றார்கள். நாங் கள் ஒவ்வொருவரும் எங்கள் பெற் றோரைக் குறித்து இன்று சிந்தித்துப் பார்ப்போமென்றால், அவர்களைக் குறி த்த நன்றி எங்கள் உள்ளத்தில் பெரு கும். அப்படியாக சிந்திக்கின்ற வேளை யிலே, நீங்கள் உங்களிடம் ஒரு கேள் வியை கேட்டுக் கொள்ளுங்கள். ஏன் என் பெற்றோர் அப்படியாக என க்காக பல தியாகங்களை செய்தார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். தங்கள் பிள்ளைகள், ஆரோக்கியமாக, சமாதானமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் எங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்படி நாங்கள் இடம் கொடு க்கின்றோமா. என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு வேளை, இந்தப் பூவுலகிலே, சிலர் தங்கள் பெற்றோரால் நன்மைகளை பெற்றுக் கொள்ளாதிருக்கலாம். ஆனால் எங்கள் பரம பிதாவானவர் பாரபட்சம் இல்லாமல் யாவரையும் அன்பு செய்கின்றார். மீட்பரா கிய இயேசு வழி யாக நாங்கள் அவருடைய பிள்ளைகளாகும்படி செய் திருக்கின்றார். இந்த புதிய ஆண்டை ஆரம்பிக்கின்ற வேளையிலே, பிதாவாகிய தேவ னுடைய அன்பின் ஆழத்தை சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்திலே, பாவியாக இருக்கும் ஒரு மனு~ன், அழிந்து போகக்கூடாது என்று யார் அவனை மனதார அன்பு செய்யக் கூடும்? எங்கள் பரம தந்தை, பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு பாவிகளுக்கு மறு வாழ்வு கொடுப்பது மட்டும ல்லாமல், அவர்களது முன்னிலைமையை கருதாமல், அவர்களை தம்மு டைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்கிறார். யாவரும் பரலோகிலே நித் திய வாழ்வு அடைய வேண்டும் என்பதே அவருடைய அநாதி தீர்மா னம். அந்த நோக்கம் எங்களில் நிறைவேறும்படிக்கு, இந்த ஆண்டிலே எங்களை தேவனிடத்தில் ஒப்புக் கொடுப்போம்.

ஜெபம்:

எங்களை உம்முடைய பிள்ளைகளாக அழைத்த தேவனே, உம்மு டைய அன்பு அளவிடமுடியாதது. உம்முடைய அழைப்பின் நோக்கத்தை உணர்ந்து வாழும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33