புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 31, 2020)

ஜீவன் தரும் திரு வார்த்தைகள்

ஏசாயா 46:4

இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.


பெரும் எதிர்பார்ப்புக்களோடு, மனிதர்கள் மேலே மனிதர்கள் நம்பிக்கை வைத்து வாழும் போது தமது வாழ்விலே பல ஏமாற்றங்களை சந்திக்கி ன்றார்கள். பிள்ளைகள் பெற்றோர் மேலும், பெற்றோர் பிள்ளைகள் மே லும், ஊழியர்கள் உலக எஜமான்கள் மேலும், குடிமக்கள் தங்கள் அதி காரிகள் மேலும், நோயாளிகள் வைத் தியர்கள் மேலும், நண்பர்கள் தத்த மது நண்பர்கள் மேலும் நம்பி க்கை வைக்கின்றார்கள். ஆனால் பொதுவா க, எல்லா மனிதர்களும் தாம் மட்டு ப்படுத்தப்பட்டவர்கள் என்பதை மற ந்து போய்விடுகின்றார்கள். மனிதர் கள் தாம் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரர்களாக நடக்க வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களாக இருந்தாலும், சந்தர்;ப்ப சூழ்நிலைகளா னது அவர்களை செயலிழக்க செய்து விடுகின்றது. இயற்கை அனர் த்தங்களும், கொள்ளை நோய்களும் ஒரு நொடிப் பொழுதில் உலககை மாற்றிப் போடுகின்றது. மேலும் மனிதர்கள், தங்கள் தொழிலும், அந் தஸ்திலும், ஐசுவரியத்திலும், சரீர பெலத்திலும் நம்பிக்கை வைத்து வாழ்கின்றார்கள். இறுதியிலே இவைகள் ஒன்றும் தங்களுக்கு உதவ முடியாது என்பதை அறிந்து கொள்கின்றா ர்கள். தேவனா கிய கர்த்தர் தம்முடைய ஜனங்களை நோக்கி: “எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற் பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர் வயதுவ ரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந் துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.” என்று கூறியிருக்கின்றார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் மேல் நம்பிக்கையாயிருங் கள். “அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலு ள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மை யைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ் செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களை க் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக் கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கி விடுகிறார்; நீதிமா ன்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகி றார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன் மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். கர்த்தர் சதாகாலங்க ளிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமு றையாகவும் ராஜரீகம் பண்ணுகிறார். அல்லேலூயா”

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, இதுவரைக்கும் என்னை நடத்தி வந்த உம்முடைய கிருபைக்காக நன்றி. நித்தமும் நான் உம்மைப் பற்றிக் கொண்டிருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 28:20