புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 30, 2020)

கர்த்தர் என் சகாயர்

சங்கீதம் 121:2

வானத்தையும் பூமியை யும் உண்டாக்கின கர்த்த ரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.


நீர் என் உள்ளிந்திரியங்களைக் அறிந்தவராயிருக்கின்றீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட் டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவை கள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்த னை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.என்று பரிசுத்த வேதாகமத்திலே சங்கீதக் காரன் கூறியிருக்கின்றார். அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன் என்ற வார்த்தையின் படி எங்கள் ஒவ்வொருவரையும் முன்குறித்த தேவன், இந்நாள் வரை வழிநடத்தி வருகின்றார். இந்த பூமியிலே வாழும்வரை ஒவ்வொரு மனிதனும் பல சவால்களுக்கு முகங் கொடுக்கின்றான். அவை ஒவ்வொன்றிலும் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை அறியும் அறிவிலே வளரத்தக் கதாக வழிநடத்திச் செல்கின்றார். பல கசப்பான அனுபவங்களை எதிர் நோக்கும்போது, அவர் எங்கள் மனப்புண்களில் எண்ணை தடவி, எங்களை தேற்றி பெலப்படுத்தி வருகின்றார். ஆழியின் அலைகள் வாழ் க்கைப் படகில் மோதுகின்ற போதும் அவருடைய சமுகம் எங்களோடு இருந்து எங்களை தாங்கி வந்தது. இக்கட்டும் நெருக்கமும் எங்களை பிடித்துக் கொள்ளும் போது அவருடைய கற்பனைகள் எங்கள் மனமகி ழ்ச்சியாக இருந்து வந்தது. எங்கள்; கன்மலையும், எங்கள் கோட்டை யும், எங்கள் இரட்சகரும், எங்கள் தேவனும், நாங்கள்; நம்பியிருக்கிற எங்கள் துருகமும், எங்கள் கேடகமும், எங்கள் இரட்சணியக் கொம்பும், எங்கள் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். கடந்த மாதங்களை திரு ம்பிப் பாருங்கள். கடந்து வந்த பாதையை திரும்பிப் பாருங்கள். நன்றியுள்ள இருதயத்தோடு தேவனை துதியுங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, நீரே என் சகாயர். பரம தந்தையே, உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. நீர் எனக்குச் செய்த நன்மைகள் யாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:1-6